புதன், 26 பிப்ரவரி, 2020

குடியுரிமைக்கான ஆவணம் அல்ல -UIDAI

UIDAI : ஆதார் அட்டை ஒரு குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India...
ஆதார் அட்டை ஒரு குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் -யுஐடிஏஐ (Unique Identification Authority of India UIDAI) கூறியுள்ளது.
போலியான தகவல் கொடுத்து ஆதார் அட்டை பெற்றதாக 127 பேருக்கு விளக்கம் கேட்டு யுஐடிஏஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வந்த நாளிதழ் செய்திகளின் பின்னனியில் UIDAI இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதார் குடியுரிமைக்கான ஆவணம் இல்லை. ஆதாருக்கு விண்ணப்பம் செய்வதற்கு 182 நாட்களுக்கு முன்பு வரை ஒரு நபருடைய இந்திய வசிப்பிடம் குறித்து அறிந்துக் கொள்ள ஆதார் சட்டத்தின் அடிப்படையில் யுஐடிஏஐ அமைப்புக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் காவல்துறையின் அறிக்கைகளுக்கு பின்பே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக UIDAI தெளிவுபடுத்தியுள்ளது.
மொத்தம் 127 பேர் போலியான ஆவணங்களை கொடுத்து ஆதார் எண் பெற்றுள்ளதாக மாநில காவல்துறை ஹைதராபாத்தில் உள்ள UIDAI’யின் பிராந்திய அலுவலகத்துக்கு தகவல் அளித்தது. மேலும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும் அவர்கள் ஆதார் எண்ணை பெற தகுதியற்றவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது, என UIDAI தெரிவித்துள்ளது.
ஆதார் சட்டத்தின் படி இத்தகைய ஆதார் எண்கள் ரத்து செய்ய தகுதியுடையவை. எனவே ஹைதராபாத்தில் உள்ள பிராந்திய அலுவலகம் அவர்களை நேரில் ஆஜராகி தாங்கள் ஆதார் பெற்றதற்கான ஆவணங்களை காட்டி தெளிவுபடுத்திக் கொள்ளும்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ்களுக்கு குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை மேலும் ஆதார் எண்ணை ரத்து செய்வதற்கும் ஒருவருடைய நாட்டுரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் UIDAI வலியுறுத்தியுள்ளது.
ஒருவேளை அவர்கள் போலியான ஆவணங்களை கொடுத்து ஆதார் எண் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களது ஆதார் ரத்து செய்யபடவோ அல்லது இடைக்கால தடை விதிக்கவோ வாய்புள்ளது. இது அவர்களது சட்டவிரோத செயலின் தீவிரத்தை பொறுத்தது. போலியான ஆவணங்கள் போன்ற கடுமையான தவறுகளுக்கு பொருத்தமான நடவடிக்கையாக அதாரை தற்காலிகமாக நிறுத்திவைப்பது, ரத்து செய்வது போன்றவை கிடைக்க வாய்புள்ளதாக UIDAI எச்சரித்துள்ளது.
credit indianexpress.com