குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் கடந்த 15 நாட்களாக தொடர்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய அமைப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இரண்டாவது முறையாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிலுள்ள சில சந்தேகங்களுக்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த விளக்கம் கிடைத்தவுடன் போராட்டக் குழுவுக்கு சாதகமான பதில் அளிக்கப்படும் எனவும் முதல்வர் கூறியதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
credit ns7.tv