ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

சமூக ஊடக புதிய விதிமுறைகள்: ஆதரவும் எதிர்ப்பும்!

 கடந்த வியாழக்கிழமை, சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் மற்றும் OTT உள்ளடக்க வழங்குநர்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட நெறிமுறைகளை வெளியிட்டது.  இதன் மூலம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவின் கீழ் இடைமுகங்களாக செயல்படும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பாதுக்காப்பு அம்சங்கள்  தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் ட்விட்டர் நிறுவனத்துடன்  ஏற்பட்ட சமீபத்திய விரக்தியால் தூண்டப்பட்டதா (அ) உலகளாவிய போக்கின் ஒரு பகுதியா? என்பதை தாண்டி…. எது நியாயமான பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பதை யார் தீர்மானிப்பார்கள் அரசா (அ) பெரும் தொழிநுட்ப நிறுவனங்களா? என்ற கேள்வி முக்கியதத்துவம் பெருகிறது.

இருதரப்ப்பில் உள்ள  வாதங்களை சக்ரவர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுடன் விவாதிக்கிறார்.  இவர், டஃப்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியராக உள்ளார்.

Explained: The arguments for and against the new social media rules

முதல்வாதம்: வெறுப்பு பேச்சுகளை அகற்றுவதால் பெரு நிறுவனங்கள் வணிக ரீதியாக பயனடையப் போவதில்லை என்ற அனுமாத்தின் கீழ் அரசின் இந்த தலையீட்டை நியாயப்படுத்த முடியும்.

இருப்பினும், மோசமான உள்ளடக்கங்களை அனுமதிப்பதால் ஏற்படும் அபாயங்களை நிருவனங்கள் அறிந்து தான் செயல்படுகின்றன என தொழில்நுட்ப ஆதரவாளர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இரண்டாவது வாதம்: மக்கள் ஜனநாயகத்தில், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆகவே, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து கடினமான முடுவுகளை பொது நலன் மற்றும் பொது நம்பிக்கையின் பாதுகாவலர்கள் எடுப்பது தான் சிறந்தது  என்று கருத்து முன்வைக்கப்படுகிறது.

ஆனால், நடைமுறையில், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள், தங்களை அனைத்து மக்களுக்குமான பொதுவான பிரதிநிதிகளாக கருதுவதில்லை என்ற எதிர் கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.

யார் உண்மையில் பொது நம்பிக்கையின் பாதுகாவலர்கள்? என்ற கேள்வி முக்கியத்துவம் பெற வில்லை என்பதை ஒத்துக் கொள்வது மூன்றாவது கண்ணோட்டமாக உள்ளது.

இறையாண்மை பொருந்திய அரசுக்கும், பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையிலான இந்த  போராட்டத்தின் முடிவுகள், இரு தரப்புக்கும் உள்ள பேரம் பேசும் சக்தியால் மட்டுமே  தீர்மானிக்கப்படும்.

சர்வ வல்லமை பொருந்திய அரசு, தங்கள் எல்லை பகுதிகளுக்குள் சமூக தளங்களையும் நீக்கும் திறனைக் கொண்டிருந்தாலும், சில தளங்கள் தற்போது கோடிக்கணக்கான பயனர்களை கொண்டிருக்கிறது. பயனர்கள் கிளர்ச்சியை சந்திக்க நேரிடம்.

” உலகளாவிய இராஜதந்திரத்தின் ஒரு புதிய சகாப்தத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை என்னால் உணர முடிகிறது. மற்ற நாடுகளை கைப்பற்றுவது, ரத்தம் சிந்துவது என்ற அடிப்படை சொல்லாடல் இங்கு இல்லை என்று ஆசிரியர் தெரிவிக்கிறார்.

மேலும், புவிசார் அரசியல் வளையத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாராகிவிட்டன. புவிசார் அரசியல் சிக்கல்களை தீர்ப்பதற்கும், புது சிக்கல்களை உருவாக்குவதற்கும்   தேவையான பரிமாணங்களை பெறத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் போன்ற காரணங்களால் டிக்டாக் செயலியை  இந்திய அரசால் தடை செய்ய முடியும்.  ஆனால், ட்விட்டர் வலைத்தளத்தை ரத்து செய்தால், பிரதமர் நரேந்திர மோடியை தன்னை பின்தொடரும் 66 மில்லியன் பயனர்களை உடனடியாக இழந்துவிடுவார். இந்த அடிப்பை ட்விட்டருக்கும் தெரியும், அரசாங்கத்திற்கும்  தெரியும், ”என்றும் தெரிவிக்கிறார்.

source https://tamil.indianexpress.com/explained/the-arguments-for-and-against-the-new-social-media-rules/

திமுக ஆட்சி உறுதி; எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம்? ஏபிபி- சி வோட்டர் கணிப்பு

  இந்தியத் தேர்தல் ஆணையம் (இசிஐ) கடந்த வெள்ளிக்கிழமை மாலை தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்த நிலையில், ஏபிபி நியூஸ், சி-வோட்டருடன் இணைந்து வாக்காளரின் மனநிலையைத் தெரிந்துகொள்வதற்காக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.

ஏபிபி நெட்வொர்க்-சி வாக்காளர் கணக்கெடுப்பின் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 41 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று திமுக, காங்கிரஸ் மற்றும் பிற காட்சிகள் உள்ளிட்ட யுபிஏ கூட்டணிக்கு 154-162 இடங்கள் கணிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இம்முறை திமுக நிச்சயம் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கணக்கெடுப்பின்படி, அதிமுக, பாஜக மற்றும் பிற கட்சிகள் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி, சுமார் 28.6 சதவிகித வாக்குகளைப் பெற்று 58-66 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், எம்.என்.எம் 2-6 இடங்களையும், ஏ.எம்.எம்.கே 1-5 மற்றும் மற்ற கட்சியினர் 5-9 இடங்களையும் கொண்டு முறையே 8.3 சதவிகிதம், 6.9 சதவிகிதம் மற்றும் 14.8 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் (எம்.என்.எம்) நிறுவனர் கமல்ஹாசனுக்கு, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மிக முக்கிய அரசியல் பயணமாக இருக்கும்.

2016-ம் ஆண்டில், அதிமுக, பாஜக மற்றும் பிற கட்சிகள் உள்ளடக்கிய என்.டி.ஏ கூட்டணி 234 இடங்களில் 136 இடங்களை 43.7% வாக்குகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான போட்டியாளரான திமுக-காங்கிரஸ் கூட்டணி, 39.4% வாக்குகளுடன் 98 இடங்களைப் பெற்றது. அதேபோல காங்கிரஸ் போட்டியிட்ட 41 இடங்களில் 8 இடங்களைப் பெற முடிந்தது.

தமிழக சட்டசபையின் 234 உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் 2021 மே 24-ம் தேதியுடன் முடிவடையும். இந்த காலக்கெடு முடிவதற்கு முன்னர், ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒரே கட்டத்தில் நடத்துவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவு மே 2-ம் தேதி அறிவிக்கப்படும்.

பிப்ரவரி 26-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறை மாதிரி தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது. கொரோனா வைரஸ் நிலைமையை மனதில் கொண்டு, வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், கூடுதல் மணிநேரமும் அனுமதிக்கப்படும். வாக்காளர் பதிவேட்டில் கையொப்பமிடவும் வாக்களிக்க ஈ.வி.எம் பட்டனை அழுத்தவும் பாதுகாப்பாக இருக்க வாக்காளருக்குக் கையுறைகள் வழங்கப்படும்

source : https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-to-win-for-sure-abp-news-c-voter-opinion-poll-tamil-nadu-elections-2021-tamil-news-249981/

சனி, 27 பிப்ரவரி, 2021

போர் நிறுத்த ஒப்பந்தம் : மூன்று மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா – பாகிஸ்தான்

 இந்தியா பாகிஸ்தான் தரப்பில் கடந்த மூன்றூ மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானின் மக்கள் – ராணுவ தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்துள்ளனர். வருகின்ற காலங்களில் மிகவும் அமைதியை நோக்கி பல்வேறு முன்னெடுப்புகள் நடக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தோவல், இம்ரான் கானின் சிறப்பு உதவியாளராக பாதுகாப்பு விவகாரங்களில் பணியாற்றும் மொயீத் யூசஃபை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் மேலும் பாகிஸ்தானின் ராணுவ தளபது கமார் ஜாவத் பஜ்வாவுடனுன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. யூசப் கானுக்கு மிக அருகிலும் அதே நேரத்தில் ராணுவத்துடனும் நல்ல தொடர்பில் இருக்கிறார். பஜ்வா பாகிஸ்தான் ராணுவத்தின் சக்தியாக திகழ்கிறார் எனவே இவர்கள் இருவரும் முக்கியான தொடர்பாக இதில் உள்ளனர்.

வியாழக்கிழமை அன்று யூசப் இது போன்ற பேச்சுவார்த்தை எதுவும் தோவலுடன் நடைபெறவில்லை என்றும் அந்த தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நிர்வகிக்கப்பட வேண்டிய கருத்தினை மனதில் கொண்டு இரு தரப்பினரும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை வெளியிட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை; இந்தியாவிற்கு மேலும் ஒரு சோதனை

கட்டுப்பாட்டுப் பாதையில் யுத்த நிறுத்த உடன்படிக்கைகளை கடைப்பிடிப்பதாக இரு படைகளும் அறிவித்த சில மணிநேரங்களிலேயே மாற்றத்தின் முதல் அறிகுறிகள் தெரிந்தன. இது குறித்து வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “இந்தியா பாகிஸ்தானுடனான இயல்பான, நட்பு உறவினையே விரும்புகிறது. ஏதேனும் இருந்தால், அமைதியான இருதரப்பு முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நாம் எப்போதும் பின்பற்றுகிறோம். முக்கிய விஷயங்களில், நம் நிலைப்பாடு மாறாமல் உள்ளது. நான் அதை மீண்டும் வலியுறுத்த தேவையில்லை என்றார்.

பயங்கரவாதமும் பேச்சுவார்த்தைகளும் ஒன்றாக போவதில்லை என்ற டெல்லியின் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் அழுத்தத்துடன் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.  பாகிஸ்தானுக்கு எதிரான நிதி நடவடிக்கை குறித்து (Financial Action Task Force) எழுப்பிய கேள்விக்கு பதில் கூறவில்லை அவர். மேலும் பயங்கரவாதத்திற்கான நிதி தொடர்பாக இஸ்லமாபாத் கூறிய கருத்து குறித்தும் அவர் பதிவிடவில்லை. FATF அதன் சொந்த நடைமுறைகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

எல்.ஓ.சி.யில் நடைமுறைக்கு வந்துள்ள யுத்த நிறுத்தம் தொடர்பான முடிவு குறித்து யூசஃப் ட்வீட் செய்துள்ளார். அதில், டி.ஜி.எம்.ஓக்களின் நிறுவப்பட்ட சேனல் மூலம் விவாதங்களின் விளைவாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாக இவை இயல்பாகவே பொதுமக்கள் பார்வையில் இல்லை மற்றும் தனிப்பட்ட சேனலின் மூலம் தனிப்பட்ட முறையில் இவை மேற்கொள்ளப்பட்டது.  எல்.ஓ.சி. தொடர்பான புரிதல் நல்ல மாற்றங்களுக்கு வழி வகுக்கும். இது அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் என்று பாகிஸ்தான் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் விமானப்படை அகாடமிக்கு சென்ற பாஜ்வா பிப்ரவரி 2ம் தேதி அன்று “பரஸ்பர மரியாதை மற்றும் அமைதியான சகவாழ்வுக்கான இலட்சியத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எல்லா திசைகளிலும் அமைதியை பின்பற்ற வேண்டிய நேரம் இது. ஜம்மு-காஷ்மீரின் நீண்டகால பிரச்சினையை அம்மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப கண்ணியமாகவும் அமைதியாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் தீர்க்க வேண்டும், மேலும் இந்த மனித துயரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

370வது அரசியல் சாசனப்பிரிவி ரத்து செய்யப்பட்ட்ட பிறகு பாகிஸ்தானிடம் இருந்து வந்த இணக்கமான கருத்துகளில் இதுவும் ஒன்று என்று அரசியல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைதி வேண்டும் என்றால் முன்னோக்கிச் செல்ல வேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் அனைவரும் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும். கருத்தியல் ரீதியாக இருக்க வேண்டாம் என்று யூசப் மேற்கோள் காட்டினார்.

பிப்ரவரி 18 அன்று, தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒன்பது நாடுகளின் சுகாதார செயலாளர்களின் கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்றது, அதே நேரத்தில் இந்த வார தொடக்கத்தில், இலங்கைக்கு செல்லும் வழியில் இம்ரான் கானின் விமானம் இந்திய விமான இடத்திற்கு மேலே பறக்க டெல்லி அனுமதித்தது. பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை பார்ப்பதற்கு பிரதமர் மோடி லாகூர் சென்றார். அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து பதான்கோட் தாக்குதல் நடைபெற்றது. உரி மற்றும் புல்வாமா தாக்குதல்கள், அரசியல் சட்டப்பிரிவி 370 நீக்குதல் ஆகியவை பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கியது. இரண்டு பக்கமும் ராஜதந்திர நடவடிக்கைகளை குறைத்தனர். கடந்த ஆண்டு அது இன்னும் குறைந்து போனது.

source https://tamil.indianexpress.com/india/ceasefire-pact-back-channels-open-for-3-months-via-doval-imran-aide-and-pak-army-chief/

ஏப். 6-ல் வாக்குப்பதிவு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் அமல்

26 2 2021  தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது

ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நான்கு மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் (புதுச்சேரி) பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

அதோடு அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக, கமலின் மநீம போன்ற கட்சிகள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

2020 நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, இந்த மாநிலங்களுக்கான தேர்தல்கள் கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் நடத்தப்பட உள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட அதே நெறிமுறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து,இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் அதிகாரிகள் தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளனர். அதோடு 5 மாநிலங்களின் தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளனர்

மேற்கு வங்கத்தில் 294 இடங்களுக்கும், தமிழ்நாட்டில் 234 இடங்களுக்கும், கேரளாவில் 140 இடங்களுக்கும், அசாமில் 126 இடங்களுக்கும், புதுச்சேரியில் 30 இடங்களுக்கும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

source : https://tamil.indianexpress.com/election/assembly-election-date-and-schedule-announcement-live-update-and-west-bengal-puducherry-kerala-tamil-nadu-and-assam-state-assembly-election-date-and-schedule-announcement-live-update-news-in-249648/

இனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்

  விர்ச்சுவல் ஆய்வாளர் நிகழ்வில் ‘சூப்பர் ஃபாலோ’ என்ற புதிய அம்சத்தை ட்விட்டர் அறிவித்தது. இது, ட்விட்டர் பயனர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு வழங்கும் பிரத்தியேக ட்வீட் மற்றும் பிற உள்ளடக்கங்களிலிருந்து பணம் சம்பாதிக்க அனுமதிக்கும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், உள்ளடக்கப் படைப்பாளருக்குப் பணம் செலுத்துபவர்களுக்கு “சமூக அணுகல்,” “ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள்” உள்ளிட்ட சந்தாதாரர்களுக்கு மட்டுமே நன்மைகள் கிடைக்கும்.

கட்டண சந்தா சேவையில் “பிரத்தியேக உள்ளடக்கம்,” “சந்தாதாரர்க்கான செய்திமடல்கள் மட்டும்” மற்றும் சந்தாதாரர்களுக்கான “ஆதரவாளர் பேட்ஜ்” ஆகியவை அடங்கும். ஆரம்பத்தில், கட்டண சூப்பர் ஃபாலோ அம்சத்தின் விலை குறைவாக இருக்கும். ட்விட்டர் பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்களின்படி, சூப்பர் ஃபாலோ சந்தா ஒரு மாத அடிப்படையில் சுமார் ரூ.365 செலுத்துமாறு கேட்கும்.

“சூப்பர் ஃபாலோ போன்ற பார்வையாளர்களின் நிதி வாய்ப்புகளை ஆராய்வது படைப்பாளர்களையும் வெளியீட்டாளர்களையும் தங்கள் பார்வையாளர்களால் நேரடியாக ஆதரிக்க அனுமதிக்கும். மேலும், அவர்களின் பார்வையாளர்கள் விரும்பும் உள்ளடக்கத்தை தொடர்ந்து உருவாக்க அவர்களை ஊக்குவிக்கும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, ட்விட்டர் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தாவை ரத்து செய்வதற்கான விருப்பத்தைப் பெறுவார்கள். ட்விட்டர் இந்த அம்சத்தை எப்போது வெளியிடும் என்பது தற்போது தெரியவில்லை. ஆனால், இது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டரின் கட்டண சந்தா அம்சம் பரந்த அளவிலான படைப்பாளர்களுக்கு மட்டுமல்ல, நிருபர்களுக்கும் உதவும். “சமூகங்கள்” என்று அழைக்கப்படும் ஒரு அம்சத்தைச் சேர்க்கவும் ட்விட்டர் தயாராக உள்ளது. இது ஃபேஸ்புக் குழுக்கள் செயல்படுவதைப் போலவே செயல்படும். பயனர்கள் ஒரு குழுவை உருவாக்க முடியும், அதே ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்பவர்கள் அந்தக் குழுவில் சேர முடியும்.

ட்விட்டர் பயனர்கள் விரைவில் “பாதுகாப்பு முறை” அம்சத்தைக் காண்பார்கள். இது தவறான கணக்குகளை தானாகத் தடுக்க அல்லது முடக்க அனுமதிக்கும்

source : https://tamil.indianexpress.com/technology/social-media-twitter-to-allow-users-to-earn-money-from-tweets-and-other-contents-tamil-news-249702/

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அக்கவுண்டுகளை நிரந்தரமா டெலிட் செய்ய வேண்டுமா?

 வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிரந்தரமாக நீக்குவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா? ஆனால், சமூக ஊடக கணக்குகளை நீக்குவதற்கு முன்பு உங்கள் எல்லா தரவையும் முதலில் பதிவிறக்கம் செய்யுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். உங்கள் தரவை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம், எவ்வளவு நேரம் எடுக்கும், எந்த தரவு கிடைக்கும் என்பதைப் பற்றி எல்லாவற்றையும் விரிவாக இங்கு விளக்கியுள்ளோம். உங்கள் கணக்கை நீக்கியதும், உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், அரட்டைகள் மற்றும் பிற கணக்குத் தரவுகள் அனைத்தும் தளங்களிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதை நினைவில் கொள்க. மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

வாட்ஸ்அப் தரவை எவ்வாறு பதிவிறக்குவது?

உங்கள் வாட்ஸ்அப் கணக்கை நீக்குவதற்கு முன், உங்கள் எல்லா சாட்களையும் பேக் அப் எடுக்க விரும்பினால் உங்கள் எல்லா தரவையும் பதிவிறக்கம் செய்யலாம்.

ஸ்டெப் 1: உங்கள் தனிப்பட்ட வாட்ஸ்அப் சாட்களை நீங்கள் ஏற்றுமதி செய்யவேண்டும். இதற்காக நீங்கள் அமைப்புகள்> அரட்டைகள்> அரட்டை வரலாறு> ஏற்றுமதி அரட்டையைப் பார்வையிட வேண்டும்.

ஸ்டெப் 2: நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் அரட்டையைத் தேர்வுசெய்க.

ஸ்டெப் 3: நீங்கள் தனிப்பட்டவர்களுடன் பரிமாறிக்கொண்ட அனைத்து ஃபைல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற ஊடகங்களையும் சேர்க்க விரும்பினால் “மீடியாவைச் சேர்” என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: நீங்கள் சாட்டை ஏற்றுமதி செய்ய விரும்பும் பயன்பாட்டைத் தேர்வுசெய்க. அதற்கு கூகுள் டிரைவ் மற்றும் ஜிமெயில் போன்ற பயன்பாடுகளை வாட்ஸ்அப் காட்டும்.

வாட்ஸ்அப் கணக்கை நீக்குவது எப்படி?

ஸ்டெப் 1: வாட்ஸ்அப்பைத் திறந்து மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: அமைப்புகள்> கணக்கு பிரிவு> எனது கணக்கை நீக்கு.

ஸ்டெப் 3: நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு எனது கணக்கை நீக்கு என்பதை க்ளிக் செய்ய வேண்டும். உங்கள் கணக்கை ஏன் நீக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்க வாட்ஸ்அப் கேட்கும்.

ஸ்டெப் 4: காரணத்தைத் தேர்ந்தெடுத்ததும், நீங்கள் செய்ய வேண்டியது எனது கணக்கை நீக்கு என்பதை க்ளிக் செய்வதுதான்.

அனைத்து ஃபேஸ்புக் தரவையும் பதிவிறக்குவது எப்படி?

ஃபேஸ்புக் கணக்கை நீக்குவதற்கு முன்பு உங்கள் எல்லா ஃபேஸ்புக் தரவுகளையும் பதிவிறக்கம் செய்யலாம். தரவுக்காக நீங்கள் ஃபேஸ்புக்கிற்கு ஒரு கோரிக்கையை அனுப்பினால், அது உங்களுக்கு ஒரு இணைப்பை மின்னஞ்சல் செய்யும். சமூக ஊடக மேடையில் நீங்கள் பகிர்ந்த பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இதில் அடங்கும். ஃபேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்த அனைத்து செய்திகளும் அல்லது அரட்டை உரையாடல்களும் கிடைக்கும். நிறுவனம் உங்கள் தொடர்பு தகவல், நிகழ்வுகள், காலவரிசை மற்றும் பிற விவரங்களையும் வழங்குகிறது.

ஸ்டெப் 1: உங்கள் ஃபேஸ்புக் தரவின் பதிவிறக்க இணைப்பைப் பெற, அமைப்புகள் மற்றும் தனியுரிமை பிரிவுக்குச் செல்லுங்கள். இது ஹாம்பர்கர் மெனுவில் மறைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெப் 2: அமைப்புகளை க்ளிக் செய்யவும் > கீழே ஸ்க்ரோல் செய்து, “உங்கள் தகவலைப் பதிவிறக்கு” என்பதை க்ளிக் செய்யவும். (ஃபேஸ்புக் தகவல் பிரிவில் இந்த விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள்.)

ஸ்டெப் 3: ஃபேஸ்புக்கிலிருந்து நீங்கள் விரும்பும் அனைத்து தகவல்களையும் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேர்வுநீக்கவும் மற்றும் உருவாக்கு ஃபைல் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இந்த நிறுவனம் உங்கள் தரவிற்கான பதிவிறக்க இணைப்பை உங்களுக்கு அனுப்பும். பதிவிறக்கும் நேரம் நீங்கள் எவ்வளவு தரவை உருவாக்கியுள்ளீர்கள் என்பதைப் பொறுத்தது. அதற்கு 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். மேலே குறிப்பிட்டுள்ளபடி, அதன் இணைப்பு மின்னஞ்சல் வழியாக கிடைக்கும்.

ஃபேஸ்புக் கணக்கை நீக்குவது எப்படி?

ஸ்டெப் 1: உங்கள் தொலைபேசியில் ஃபேஸ்புக் பயன்பாட்டைத் திறந்து அமைப்புகள் & தனியுரிமை> அமைப்புகளுக்குச் செல்லவும்.

ஸ்டெப் 2: தேடல் பட்டியில், செயலிழக்க என்று தட்டச்சு செய்து தேடல் பட்டனை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: “கணக்கு உரிமை மற்றும் கட்டுப்பாடு” விருப்பத்தை இப்போது நீங்கள் பெறுவீர்கள். அதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: செயலிழக்க மற்றும் நீக்கு என்பதை க்ளிக் செய்து> கணக்கை நிரந்தரமாக நீக்க கணக்கை நீக்கு என்பதைத் தேர்வுசெய்க. தேர்வு செய்த பிறகு, “கணக்கு நீக்குதலுக்குத் தொடரவும்” என்பதைக் கிளிக் செய்க.

அனைத்து இன்ஸ்டாகிராம் தரவையும் பதிவிறக்குவது எப்படி?

ஃபேஸ்புக்கைப் போலவே, இன்ஸ்டாகிராமும் உங்கள் எல்லா தரவையும் பதிவிறக்க அனுமதிக்கிறது. பதிவிறக்க இணைப்பை நீங்கள் கேட்டவுடன், நீங்கள் பகிர்ந்த அனைத்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கதைகளின் ஃபைல்களை உருவாக்கி, அந்த இணைப்பை உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறது. இந்த செயல்முறைக்கு 48 மணிநேரம் வரை ஆகலாம். எனவே, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் கூறுகிறது.

ஸ்டெப் 1: உங்கள் தொலைபேசியில் இன்ஸ்டாகிராமைத் திறந்து, ஹாம்பர்கர் மெனுவில் தட்டுவதன் மூலம் அமைப்புகளுக்குச் செல்லவும்.

ஸ்டெப் 2: பாதுகாப்பு> தரவைப் பதிவிறக்கு> உங்கள் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.

ஸ்டெப் 3: கோரிக்கை பதிவிறக்கத்தை க்ளிக் செய்யவும். உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு முன் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுமாறு இன்ஸ்டாகிராம் கேட்கும்.

இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்குவது எப்படி?

ஸ்டெப் 1: இன்ஸ்டாகிராமின் மொபைல் பதிப்பில் எனது கணக்கை நீக்கு விருப்பத்தை இன்னும் பெறவில்லை. அதனால், கணக்கு நீக்கு பக்கத்தில் நேரடியாக செல்ல ‘இந்த இன்ஸ்டாகிராம் தளத்திற்குச் செல்லவும்’.

ஸ்டெப் 2: வெப்பில் நீங்கள் இன்ஸ்டாகிராமில் உள்நுழையவில்லை என்றால், முதலில் உள்நுழையுமாறு கேட்கப்படுவீர்கள்.

ஸ்டெப் 3: கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் உங்கள் கணக்கை ஏன் நீக்குகிறீர்கள்? மற்றும் உங்கள் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடவும். உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான விருப்பம் நீங்கள் மெனுவிலிருந்து ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுத்த பின்னரே தோன்றும்.

ஸ்டெப் 4: எனது கணக்கை நிரந்தரமாக நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

source : IndianExpress.com News 

புதுப்பிக்கப்பட்ட சமூக ஊடக விதிமுறைகள்

 


Social media digital news providers guidelines Tamil News : உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் சமூக ஊடக மோசடி குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கவலைகள் ஆகியவற்றை மேற்கோளிட்டு, சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் மற்றும் OTT உள்ளடக்க வழங்குநர்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட வழிகாட்டுதல்களை அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.

சமூக ஊடக தளங்களுக்கு, தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021 குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத்தரகர்களின் வகையை வகுக்கிறது. அதற்கான நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும். கூடுதலாக, பாரம்பரிய செய்தி ஊடகங்களுக்கு ஆன்லைன் செய்திகள் மற்றும் ஊடக தளங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளின் அடிப்படையில் நிலையான துறையை உருவாக்க விரும்புவதாக அரசாங்கம் கூறியது.

இந்த வழிகாட்டுதல்களின் பின்னணி என்ன?

ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 2018-ல் ஒரு முறை, மாநிலங்களவையில் கலந்துரையாடலில் 2018 உச்சநீதிமன்ற கண்காணிப்பு மற்றும் 2019 உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, பின்னர் 2020-ம் ஆண்டில் ஒரு குழு முன்வைத்த அறிக்கையின் மூலம், “டிஜிட்டல் தளங்களின் சாதாரண பயனர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அவர்களின் உரிமைகளை மீறும் சந்தர்ப்பத்தில் பொறுப்புக்கூறல் வேண்டும்” என்றார்.

இந்த வழிகாட்டுதல்களில் அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. எப்படி இருந்தாலும், ஜனவரி 26 அன்று செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவங்களின் வடிவத்தில் பெரிய உந்துதல் வந்தது. அதைத் தொடர்ந்து சமூக ஊடக தளத்திலிருந்து சில கணக்குகளை அகற்றுவது தொடர்பாக அரசாங்கமும் ட்விட்டரும் சிக்கலில் சிக்கின.

சமூக ஊடகங்களுக்கான வழிகாட்டுதல்கள் தரும் முக்கிய திட்டங்கள் யாவை?

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79, பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை வழங்கும் இடைத்தரகர்களுக்கு ஒரு “பாதுகாப்பான துறைமுகத்தை” வழங்குகிறது. மேலும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தால் பயனர்களின் செயல்களுக்கான பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கிறது.

கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய வழிகாட்டுதல்கள் இடைத்தரகரைப் பின்பற்ற வேண்டிய சரியான விடாமுயற்சியின் கூறுகளைப் பரிந்துரைக்கின்றன. இது தோல்வியுற்றால், பாதுகாப்பான துறைமுக விதிகள் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களுக்குப் பொருந்தாது.

சமூக ஊடக தளங்கள் உட்பட இடைத்தரகர்கள் பயனர்களிடமிருந்து புகார்களைப் பெறுவதற்கும் தீர்ப்பதற்கும் ஒரு நெறிமுறையை நிறுவ வேண்டும் என்று கட்டளையிடுவதன் மூலம், குறை தீர்க்கும் வழிமுறையைப் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய புகார்களைக் கையாள்வதற்கு இந்த தளங்களில் குறை தீர்க்கும் அதிகாரியை முதலில் நியமிக்க வேண்டும். அவர்கள் புகாரை 24 மணி நேரத்திற்குள் ஒப்புக் கொள்ள வேண்டும் மற்றும் கிடைத்த 15 நாட்களுக்குள் அதைத் தீர்க்க வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களிலிருந்து உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான விதிகளை வகுக்கிறதா?

சமூக ஊடக தளம் ஹோஸ்ட் செய்யக்கூடாத 10 வகை உள்ளடக்கங்களை இந்த விதிகள் வகுக்கின்றன.

“இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் உள்ளடக்கம், வெளிநாட்டு நாடுகளுடனான நட்பு உறவுகள், அல்லது பொது ஒழுங்கு, அல்லது எந்தவொரு அறியக்கூடிய குற்றத்தின் ஆணைக்குழுவையும் தூண்டுகிறது அல்லது எந்தவொரு குற்றத்தையும் விசாரிப்பதைத் தடுக்கிறது அல்லது எந்தவொரு வெளிநாட்டையும் அவமதிக்கும் உள்ளடக்கம் ஆகியவை இதில் அடங்கும்”. “அவதூறானது, ஆபாசமானது, பீடோபிலிக், உடல் தனியுரிமை உட்பட மற்றொருவரின் தனியுரிமையை ஆக்கிரமிப்பது; பாலின அடிப்படையில் அவமதிப்பு அல்லது துன்புறுத்தல்; அவதூறு, இன அல்லது இனரீதியாக ஆட்சேபிக்கத்தக்கது; பணமோசடி அல்லது சூதாட்டத்துடன் தொடர்புடையது அல்லது ஊக்குவித்தல், அல்லது இந்தியாவின் சட்டங்களுக்கு முரணானது அல்லது முரணானது” முதலியன அடங்கும்.

நீதிமன்றம் அல்லது பொருத்தமான அரசாங்க நிறுவனத்திடமிருந்து தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை ஹோஸ்டிங் செய்வது குறித்த தகவல் கிடைத்தவுடன், 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.

சமூக ஊடக நிறுவனங்களுக்கு உரிய விடாமுயற்சி என்ன?

ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் வசிக்கும் தலைமை இணக்க அதிகாரியை நியமிக்கவும் சமூக ஊடக தளங்களுக்கு அவசியமாக உள்ளது. சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் 24×7 ஒருங்கிணைப்புக்கு ஒரு நோடல் தொடர்பு நபரை நியமிக்கவும் தேவைப்படுவார்கள்.

மேலும், இந்தத் தளங்களில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களையும், குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத்தரகரால் முன்கூட்டியே அகற்றப்பட்ட உள்ளடக்கங்களின் விவரங்களையும் குறிப்பிடும் மாதாந்திர இணக்க அறிக்கையை வெளியிட வேண்டும்.

விதிகள் அறிவிக்கப்பட்டு வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு உரிய விடாமுயற்சி தேவைகள் நடைமுறைக்கு வரும்.

இந்த வழிகாட்டுதல்களை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் என்ன?

ஒரு இடைத்தரகர் இந்த விதிகளை கடைப்பிடிக்கத் தவறினால், அது பாதுகாப்பான துறைமுகத்தை இழக்கும். மேலும், “ஐ.டி சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட விதிமுறைகள் உட்பட எந்தவொரு சட்டத்தின் கீழும் நடைமுறையில் இருக்கும் காலத்திற்கு” தண்டனைக்குக் கொடுக்கப்படும்.

ஐடி சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள், ஆவணங்களை சேதப்படுத்துதல், கணினி அமைப்புகளில் ஹேக்கிங் செய்தல், ஆன்லைனில் தவறாக சித்தரித்தல், ரகசியத்தன்மை, தனியுரிமை மற்றும் மோசடி நோக்கங்களுக்காக உள்ளடக்கத்தை வெளியிடுதல் போன்றவை அடங்கும். தண்டனை விதிகள் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் முதல் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை வேறுபடுகின்றன. அபராதம் ரூ.2 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

எடுத்துக்காட்டாக, எந்தவொரு கணினி மூலத்தையும் வேண்டுமென்றே சேதப்படுத்தும், மறைக்கும், அழிக்கும் அல்லது மாற்றும் எந்தவொரு நபரும் ரூ.2 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதோடு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் பெற முடியும்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66-ன் கீழ், ஒரு நபர், உரிமையாளரின் அனுமதியின்றி அல்லது கணினி அல்லது கணினி வலையமைப்பின் பொறுப்பில் உள்ள வேறு நபரின் சொற்பொழிவுகளை சேதப்படுத்தினால், அவர் ரூ.5 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அல்லது மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது இரண்டும் பெற முடியும்.

ஐடி சட்டத்தின் பிரிவு 67ஏ, “பாலியல் வெளிப்படையான செயல் அல்லது நடத்தை” பரப்பும் நபர்களுக்கு, அபராதம் மற்றும் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. முதல் சந்தர்ப்பத்தில், அத்தகைய நபர்கள் ரூ.10 லட்சம் வரை அபராதம் செலுத்தவும், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும். இரண்டாவது சந்தர்ப்பத்தில், சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகள் வரை நீளும்.

இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கின் அச்சுறுத்தல் ஆகியவற்றைக் காரணம் காட்டி அரசாங்கம் பிறப்பித்த உத்தரவின் பேரில் செயல்படத் தவறும் இடைத்தரகர்களின் நிர்வாகிகள் ஐடி சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் ஏழு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.

இணையத்தில் தரவு தனியுரிமை மற்றும் சமூக ஊடக பயனர்களுக்கு இந்தியாவில் தற்போதைய சட்டம் என்ன?

தனியுரிமையை வரையறுக்கும் 2000-ம் ஆண்டின் ஐடி சட்டத்தின் கீழ் எந்தவொரு குறிப்பிட்ட விதிகளும் இல்லை. அல்லது தனியுரிமை தொடர்பான எந்தவொரு தண்டனை விதிகளும் இல்லை என்றாலும், சட்டத்தின் சில பிரிவுகள் தரவு மீறல்கள் மற்றும் தனியுரிமை தொடர்பான குறிப்பிட்ட நிகழ்வுகளைக் கையாள்கின்றன.

எடுத்துக்காட்டாக, நியாயமான மற்றும் நல்ல தரமான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அளவுருக்களைப் பயன்படுத்துவதில் ஒரு இடைத்தரகர் அலட்சியமாக இருந்தால், அவற்றின் பயனர்கள் மற்றும் குடிமக்களின் தரவைப் பாதுகாக்கக்கூடிய பிரிவு 43ஏ இழப்பீட்டை வழங்குகிறது. நிறுவனங்கள், “நியாயமான பாதுகாப்பு நடைமுறைகளை” பயன்படுத்த வேண்டும் என்று இந்த பிரிவு கூறினாலும், இது மிகவும் தெளிவான சொற்களில் வரையறுக்கப்படவில்லை. மேலும், அவை பல்வேறு வழிகளில் விளக்கப்படலாம்.

ஒரு அரசாங்க அதிகாரி தனது கடமையின் போது, சில தகவல்களை அணுகினால், பின்னர் அதைக் கசியவிட்டால், ஐ.டி சட்டத்தின் பிரிவு 72 தண்டனை மற்றும் சிறைத்தண்டனை விதிகள் உள்ளன.

ஒரு சேவை வழங்குநர், சேவையை வழங்கும் போது அல்லது ஒப்பந்த காலத்தில், பயனரின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் அறியாமலேயே வெளிப்படுத்தினால், பிரிவு 72ஏ குற்றவியல் தண்டனைக்கு வழிவகுக்கிறது.

Social media digital news media ott content providers guidelines Tamil NewsSocial media digital news media ott guidelines

நுகர்வோருக்கான OTT சேவைகளுக்கான விதிகள் என்றால் என்ன?

யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற OTT சேவை வழங்குநர்களுக்கு, வயது பொருத்தத்தின் அடிப்படையில் உள்ளடக்கத்தை சுய வகைப்பாட்டை ஐந்து வகைகளாக அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

குழந்தைகளுக்கும் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆன்லைன் க்யூரேட்டட் உள்ளடக்கம் “யு” என வகைப்படுத்தப்படும். மேலும், 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஏற்ற உள்ளடக்கம், 7பெற்றோரின் வழிகாட்டுதலோடு பார்க்கப்படும் படம், “U / A 7+” மதிப்பீட்டோடு வகைப்படுத்தப்படும்.

13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஏற்ற உள்ளடக்கம் மற்றும் 13 வயதிற்குட்பட்ட நபரின் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் பார்க்கக்கூடிய உள்ளடக்கம் “U / A 13+” மதிப்பீடு என வகைப்படுத்தப்படும். 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஏற்ற உள்ளடக்கம் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் 16 வயதிற்குட்பட்ட நபரால் பார்க்கக்கூடிய உள்ளடக்கம் “யு / ஏ 16+” மதிப்பீடு என வகைப்படுத்தப்படும்.

பெரியவர்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்லைன் க்யூரேட்டட் உள்ளடக்கம் “ஏ” மதிப்பீடு என வகைப்படுத்தப்படும். U / A 13+ அல்லது அதற்கு மேற்பட்டதாக வகைப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்திற்கான பெற்றோர் லாக்குகளை செயல்படுத்தத் தளங்கள் தேவைப்படும்,.மேலும் “A” என வகைப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்திற்கான நம்பகமான வயது சரிபார்ப்பு வழிமுறைகள் உள்ளன.

source https://tamil.indianexpress.com/explained/social-media-digital-news-media-ott-content-providers-guidelines-tamil-news-249674/

வன்னியர்களுக்கு 10.5% சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றம்

 தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடும் சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா இன்று மாலை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அரசு கல்வி வேலை வாய்ப்பில், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுடன்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, அதிமுக மூத்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி இருவரும் டாக்டர் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, பாமகவின் முக்கிய தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடுக்கு பதிலாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க அதிமுக அமைச்சர்கள் டாக்டர் ராமதாஸுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியானது.

அதே போல, மிகவும் பிற்படுத்தபட்டோர் தொகுப்பில் உள்ள சீர்மரபினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாக, நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கடைசி நாள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு கல்வி வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு 20% இடஒதுக்கீட்டை 3ஆக பிரித்து, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 சதவீதமும் எஞ்சியவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் மூலம் அரசு கல்வி வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% சீர்மரபினருக்கு 7% எஞ்சியவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/vanniyar-internal-reservation-in-mbc-category-bill-passed-in-tn-assembly-249727/

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான புதிய கோவிட் -19 வழிகாட்டுதல்கள்

 இந்தியா வந்தடையும் சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புதிய நெறிமுறைகளின்படி, அனைத்து சர்வதேச பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் விமானத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் அவர்களின் நெகட்டிவ் சோதனை அறிக்கைகளைப் பதிவேற்ற வேண்டும். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் -19-ன் மாறுபட்ட வகைகளின் புழக்கத்தின் அறிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏன் சர்வதேச பயணிகளுக்கான புதிய கோவிட்-19 வழிகாட்டுதல்கள்?

புதிதாக உருமாறியிருக்கும் கொரோனா வைரஸின் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காகவே புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

யாருக்கெல்லாம் இது பொருந்தும்?

இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலிருந்து நேரடி விமானங்கள் எதுவும் இல்லாதாக் காரணத்தால் லண்டன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு விமானங்கள் மூலம் லண்டன், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு இந்த புதிய வழிமுறைகள் பொருந்தும்.

புதிய SOP

புதுப்பிக்கப்பட்ட ஏர் சுவிதா போர்டல் பயணிகளுக்குக் கட்டாய சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்கும்படி கேட்கும். உள்நாட்டு இணைப்புகளைக் கொண்ட பயணிகளுக்கான மற்றொரு புலம் வழங்கப்பட்டுள்ளது. இது தேவைப்பட்டால் தொடர்புத் தடமறிதல் செய்ய அதிகாரிகளுக்கு உதவும்.

சோதனையில் பயணிகள் நெகட்டிவ் முடிவுகளைப் பெற்றால், வீட்டு தனிமைப்படுத்தலில் 7 நாட்கள் இருக்கவேண்டும். பிறகு மறுபடியும் சோதனை எடுக்கப்படும்.

இந்த சோதனையிலும் நெகடிவ் முடிவு வந்தால், அவர்களுடைய உடல்நிலையை அவர்களே அடுத்த 7 நாட்களுக்கு நன்கு பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை, விமான நிலையத்தை அடைந்ததிலிருந்து, தனிமைப்படுத்துதல் வரை எந்த நிலையிலும் பாசிட்டிவ் என முடிவு வந்தால், நிச்சயம் சிகிச்சை நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

இவர்கள், நிச்சயம் அவர்களுடைய முகவரியை சுய அறிவிப்பில் பதிவு செய்திருக்கவேண்டும்.

சோதனையைக் கருத்தில்கொண்டு ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு 6-8 மணிநேரம் இடைவெளி இருக்கவேண்டும்.

லண்டன், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்பவர்களின் பட்டியலைக் கண்காணிக்கவேண்டியது ஒவ்வொரு விமான நிலையங்களின் கடமை.

இந்த நாடுகளிலிருந்து பயணிக்கும் பயணிகளின் பாஸ்போர்ட்டுகளை கண்டறிந்து செயல்படுவது இம்மிக்ரேஷன் அதிகாரிகளின் கடமை.

தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட மற்ற பயணிகளுக்கான விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை.

இருப்பினும், இந்த நாடுகளிலிருந்து பாசிட்டிவ் முடிவு பெற்ற பயணிகளின் தொடர்பிலிருந்த மற்ற பயணிகள் நிறுவன தனிமைப்படுத்துதலில் இருக்கவேண்டும். இவர்களுக்கு ஏழு நாட்களுக்கு பிறகு அல்லது அறிகுறிகளை பொறுத்து அதற்கு முன்னதாகவோ சோதனை செய்யப்படும்

source https://tamil.indianexpress.com/explained/covid-19-india-international-passengers-guidelines-tamil-news-249494/

ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை;

 


Sri Lanka at the UN rights council, another test for India :  2020ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இருந்து இலங்கை விலகியது. இந்த பேரவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நிகழ்ந்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் இலங்கை இந்த முறை மீண்டும் ஒரு தீர்மானத்தை எதிர்கொள்கிறது.

இலங்கை இந்த தீர்மானத்திற்கு எதிராக ஆதரவை திரட்டும் வகையில் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. அப்போது சக்தி வாய்ந்த நாடுகளின் தேவையற்ற தலையீடு என்றும் விவரித்துள்ளது. இது எவ்வாறாக சென்றாலும், தீர்மானம் இந்திய – இலங்கை உறவிலும், இந்தியாவிற்குள் தமிழகத்தில் நடைபெறும் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

ஐநா மனித உரிமைகள் அறிக்கை

ஜனவரி 27ம் தேதி அன்று மனித உரிமைகள் பேரவையில், ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பிற்கான ஹை கமிஷ்னர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இந்த வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை நிவர்த்தி செய்ய இலங்கை தவறியது. மேலும் அது நாட்டை ஒரு ஆபத்தான பாதையில் கொண்டு செல்கிறது. இது முந்தைய நிலைமைக்கு வழிவகுத்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகளமீண்டும் ஏற்படுத்த வழிவகுக்கும் என்று அறிக்கை எச்சரித்தது.

பொதுமக்கள் மற்றும் அரசாங்க செயல்பாடுகளை ராணுவமயமாக்குதல், முக்கியமான அரசியல்சாசன பாதுகாப்பினை மாற்றி அமைத்தல், அரசு ரீதியாக பொறுப்பு கூற மறுத்தல், சிவில் சமூகத்தினரை அச்சுறுத்துதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை பயன்படுத்துதல் போன்றவற்றை எச்சரிக்கை அறிகுறிகளாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

நாட்டின் முக்கியமான 28 பதவிகளுக்கு முன்னாள் அல்லது இந்நாள் உளவுத்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளை நியமித்திருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் போர் நிறைவுறும் காலங்களில் மனிதத்திற்கு எதிராக குற்றங்களையும், போர் குற்றங்களையும் புரிந்ததாக ஐ.நா. கூறிய இரண்டு நபர்களை முக்கிய பொறுப்புகளில் வைத்திருப்பது சற்று தொந்தரவாக இருப்பதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

அந்நாட்டில் பொதுமக்கள் செயல்பாடுகளை ஆக்கிரமிக்கும் இணையான இராணுவ பணிக்குழுக்கள் மற்றும் கமிஷன்களை உருவாக்கியது, முக்கியமான நிறுவன காசோலைகள் மற்றும் நிலுவைகளை மாற்றியமைத்தது, ஜனநாயக ஆதாயங்கள், நீதித்துறை மற்றும் பிற முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுதந்திரமான ஊடகம், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமைக்காக போராடும் அமைப்புகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கருத்து

ஐ.நா மனித உரிமைகளின் உயர் ஆணையாரான மிச்சேல் பச்சேலட், இலங்கையின் தற்போதைய அரசு முந்தைய கால குற்றங்களை விசாரிப்பதற்கு தடையாக செயல்பட்டு வருகிறது. இது அவர்களின் பொறுப்புகூறலை தடுக்கிறது. உண்மை, நீதி மற்றும் இழப்புகளுக்கு பதில் தேடி காத்திருக்கும் மக்களுக்கு இது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா உறுப்பு நாடுகள், எதிர் வரும் அதிகப்படியான அத்துமீறல்களின் ஆரம்பகால எச்சரிக்கை குறித்து செவிசாய்க்க வேண்டும் என்று பேச்லெட் கூறியுள்ளார். மனித குலத்திற்கு எதிராக குற்ற நடத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடைகள் போன்ற சர்வதேச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.

உறுப்புநாடுகள், உலகளாவிய அதிகார வரம்புகாளுக்கு உட்பட்டு தங்களின் நாடுகளிலேயே இலங்கையின் அனைத்து தரப்பினராலும் செய்யப்பட்ட சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணை மற்றும் வழக்குகளை தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். வருங்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான ஆதாரங்களை சேகரித்து பாதுகாக்க நாடுகளின் “அர்ப்பணிப்பு திறனை” ஆதரிக்கும்படி அவர் சபையை கேட்டுள்ளார்.

வரைவு தீர்மானம் கூறுவது என்ன?

இலங்கைக்கு எதிரான முதல் வரைவினை முக்கிய குழு மனித உரிமை பேரவையில் வைக்க உள்ளது. இதில் சான்றுகளைப் பாதுகாப்பதில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் திறனை வலுப்படுத்துதல், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான உத்திகளை வகுத்தல் மற்றும் அதிகார வரம்புகளைக் கொண்ட உறுப்பு நாடுகளில் நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரித்தல் ஆகியவை அடங்கிய சில கூறுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19ம் தேதியில் கூறப்பட்ட பூஜ்ஜிய வரைவில் முந்தைய 30/1 தீர்மானத்தின் தேவைகளை (அது வெளியேற்றப்பட்டது) மற்றும் 34/1 மற்றும் 40/1 ஆகிய இரண்டு பின்தொடர்தல் தீர்மானங்களின் தேவைகளை செயல்படுத்த இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பது பற்றியும் பேசுகிறது. தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகள் குறித்த முன்னேற்றத்தைக் கண்காணிக்கும்படி உயர் ஆணையம் அலுவலகம் கேட்டுக் கொண்டது. அடுத்த மார்ச்சில் அப்டேட்களும், செப்டம்பரில் முழு அறிக்கையும் அடுத்த ஆண்டில் வெளியாகும்.

2015ம் ஆண்டில் ராஜபக்‌ஷேவின் அதிபர் தேர்தல் தோல்வி, அதே ஆண்டில் பாராளுமன்ற தோல்வி போன்ற நிகழ்வின் தொடர்ச்சியாக இலங்கையின் 30/1 இணை அனுசரணையாளர் முடிவு மேற்கொள்ளப்பட்டது. மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்கே அரசு இன நல்லிணக்க செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான வாக்குறுதியின் பேரில் தீர்மானத்தின் இணை அனுசரணையாளராக இணைந்தது.

அதில, இலங்கை நாட்டினர் இல்லாத நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் இராணுவ அதிகாரிகளை பொறுப்பு கூற வைத்தல் போன்றவை ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனையாக இருந்தது. தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவை நிறைவேற்றத் தவறிய பின்னர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான பதட்டங்கள் காரணமாக அது வீழ்ச்சியடைவதற்கு முந்தைய மாதங்களில், விசாரணை ஆணையம், காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றை அரசாங்கம் அமைத்தது. .

2019 ல் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ, இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த மாட்டேன் என்று தெளிவுபடுத்தினார். கடந்த ஆண்டு, இலங்கை 30/1 தீர்மானத்திலிருந்து விலகியது. செவ்வாயன்று சபையில் உரையாற்றிய வெளியுறவு மந்திரி தினேஷ் குணவர்தன, 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு 30/1 தீர்மானம் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

முந்தைய அரசாங்கம், “மனித உரிமை மன்றத்தில் முன்னோடியில்லாத வகையில், தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையாளர்களாக இணைந்தது, இது நம் நாட்டுக்கு எதிரானது. இது இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்காத மற்றும் வழங்க முடியாத பல கடமைகளைச் சுமந்தது. இது ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று பயங்கரவாதச் செயல்களைப் உருவாக்கும் நிலைக்கு தேசிய பாதுகாப்பை சமரசம் செய்ய வழிவகுத்தது, இதனால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் ” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பங்கு என்ன?

இலங்கை தொடர்பாக புதன்கிழமை அன்று ஒரு அமர்வினை ஐநா பேரவை உருவாக்கியது. அதில் உயர் ஆணையரின் அறிக்கை தொடர்பாக விவாதிக்கவும், இது தொடர்பாக ஒவ்வொரு நாடுகளும் அறிக்கை வெளியிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தியாவும் தன்னுடைய அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்த்தது.

இந்தியாவிற்கு இது தேஜாவு தான். இலங்கை மீதான நாடுகள் தழுவிய தீர்மானங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தியா 2012ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. அப்போது இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியில் திமுக இடம் பெற்றிருந்தது. 2014 இல் இருந்து விலகியது. 2015 ஆம் ஆண்டில் இலங்கை 30/1 தீர்மானத்தில் இணைந்தபோது இது குழப்பத்திலிருந்து விடுபட்டது.

தமிழகத்தில் தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த முதல் இந்தியத் தலைவர் நான் தான் என்று அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில், இலங்கை தேயிலை இலைகளைப் படிக்கத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை அமர்வுக்குப் பிறகு இந்தியாவின் நிலை என்ன என்பது தெளிவாகிவிடும்.

source https://tamil.indianexpress.com/explained/sri-lanka-at-the-un-rights-council-another-test-for-india-249437/