செவ்வாய், 1 ஜூன், 2021

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

 1.06.2021 மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், நாளை காலைக்குள் அவை மாவட்டங்களுக்கு சென்றுவிடும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் உத்தரவின் பேரில், மகாராஷ்ட்ராவின் புனே நகரில் இருந்து விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இன்று மாலை சென்னை வந்தடைந்தன. 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்கள், 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் என மொத்தம் 4 லட்சத்து 95 ஆயிரத்து 570 தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்று அவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், நாளை காலைக்குள் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு சென்றுவிடும் என தெரிவித்தார்.

source https://news7tamil.live/5-lakh-vaccines-arrived-in-tamilnadu.html