மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக, நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
01.06.2021
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து, மத்திய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2020 – 2021 ஆம் நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி, மைனஸ் 7 புள்ளி 3 சதவீதமாக சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காணொலி மூலம் உரையாற்றிய ப.சிதம்பரம், கொரோனா பாதிப்பு காரணமாக, கடும் பாதிப்பில் இருந்த இந்திய பொருளாதாரம், மத்திய அரசின் நிர்வாக திறமையின்மையால் மேலும் சரிவை சந்தித்ததாக விமர்சித்துள்ளார்.
2018 – 2019 ஆம் நிதியாண்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட, 2020 – 2021 ஆம் நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டிய அவர், கடந்த 40 ஆண்டுகளில் 2020 -2021-ம் நிதி ஆண்டே, இந்திய பொருளாதாரத்தின் இருண்ட காலம் என குறிப்பிட்டுள்ளார்.
source https://news7tamil.live/darkest-year-in-over-4-decades-p-chidambaram-slams-government-on-gdp.html