15 09 2022
தலித் சமூகத்தைச் சேர்ந்த சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் 6 பேரை உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சகோதரிகள் , கழுத்து நெரித்து கொலை செய்யபட்ட பின்பு மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக உத்தரபிரதேச காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சகோதரிகள் இருவரும் சிறுமிகள். இதே கிராமத்தை சேர்ந்த சோட்டு என்பவருக்கு இந்த இருவரில் ஒருவரை தெரியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் அந்த சகோதரிகளுக்கு சோட்டுதான் அறிமுகம் செய்து வைத்துள்ளார். கல்யாணம் செய்து கொள்வதற்கு இருவரும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் 4 பேரும் சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரும் அதற்கு துணையாக இருந்த இருவரை காவதுறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய் கூறுகையில் தான் குளித்துகொண்டிருக்கும்போது இருவரையும் சோட்டு மற்றும் அவரது நண்பர்கள் வலுகட்டாயமாக அழைத்து சென்றனர் என்றும் அவர்களை தடுக்க முயன்றபோது, அவர்கள் இவரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து மகள்களின் இறப்பு செய்திதான் தனக்கு கிடைத்தது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதி செய்ததும்தான், அவர்கள் போராட்டத்தை நிறுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இதுபோன்று உத்தரபிரதசேத்தில் உள்ள ஹர்தாஸ் 19 வயது பெண்ணுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் எதிர் கட்சியிகள் ஆளும் கட்சியான பாஜகவை- இந்த சம்பவம் தொடர்பாக விமர்சித்து வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/india/six-arrested-for-rape-murder-of-minor-dalit-sisters-in-up-510698/