வியாழன், 8 செப்டம்பர், 2022

டெல்லியின் நூற்றாண்டு பழமையான சின்னத்தின் சுருக்கமான வரலாறு

 

கர்தவ்யா பாதையாக மாறும் டெல்லி ராஜ பாதை; அதன் வரலாறு இங்கே

Divya A

ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை நீண்டுள்ள, டெல்லியின் சின்னமான ராஜ்பாத், கர்தவ்யா பாதை (கடமையின் பாதை) என மறுபெயரிடப்பட உள்ளது, பிரதமர் நரேந்திர மோடி புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை வியாழக்கிழமை (செப்டம்பர் 8) திறந்து வைக்கும்போது இந்த பெயர் மாற்றம் அறிவிக்கப்பட உள்ளது. அவென்யூ பெரிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும், அங்கு புதிய முக்கோண பாராளுமன்ற கட்டிடம், மத்திய செயலகம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மூன்று கிலோமீட்டர் நீளம் கொண்ட பாதையின் ஒரு சுருக்கமான வரலாறு மற்றும் அது 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்பட்ட மாற்றங்களை இங்கே காணலாம்.

கிங்ஸ்வே

பிரிட்டிஷ் ஆட்சியின் போது கிங்ஸ்வே என்று அழைக்கப்பட்டது, இது 1920 ஆம் ஆண்டில் புது தில்லியின் கட்டிடக் கலைஞர்களான எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் விழாக்கள் நடத்த ஏதுவாக இருபக்கம் மரங்கள் நிறைந்த பாதையாக கட்டப்பட்டது. ரைசினா மலையில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இருந்து விஜய் சௌக் மற்றும் இந்தியா கேட் வழியாக பாதை செல்கிறது, அவென்யூ இருபுறமும் பெரிய புல்வெளிகள், கால்வாய்கள் மற்றும் மரங்களின் வரிசைகள் என வரிசையாக உள்ளது. 1911 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் கொல்கத்தாவிலிருந்து (அப்போது கல்கத்தா) டெல்லிக்கு தங்கள் தலைநகரை மாற்ற முடிவு செய்தது, அதன் விளைவாக, அவர்கள் நிர்வாக தலைநகராக செயல்பட புது டெல்லியை உருவாக்கத் தொடங்கினர்.

லுட்யன்ஸ் ஒரு “சம்பிரதாய விழாக்களை” மையமாகக் கொண்ட ஒரு நவீன ஏகாதிபத்திய நகரத்தின் பாதையை உருவாக்கினார், அதற்கு அவர்கள் கிங்ஸ்வே என்று பெயரிட்டனர். இந்த பெயர் லண்டனில் உள்ள கிங்ஸ்வேயைப் போலவே இருந்தது, 1905 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்த முக்கிய சாலை, ஜார்ஜ் V இன் தந்தை எட்வர்ட் VII இன் நினைவாக பெயரிடப்பட்டது.

டெல்லியின் கிங்ஸ்வே, துணை அரச மாளிகையிலிருந்து (அப்போது வைஸ்ராயின் வீடு; இப்போது ராஷ்டிரபதி பவன்) நகரத்தின் பரந்த காட்சியை வழங்குகிறது. 1911 ஆம் ஆண்டு தர்பாரின் போது டெல்லிக்கு வருகை தந்த செய்த இந்தியாவின் பேரரசர் ஜார்ஜ் V இன் நினைவாக இந்த சாலைக்கு கிங்ஸ்வே என்று பெயரிடப்பட்டது, அங்கு அவர் தலைநகரை மாற்றுவதற்கான முடிவை முறையாக அறிவித்தார்.

ராஜ்பாத்

இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த சாலையின் ஆங்கிலப் பெயருக்குப் பதிலாக ‘ராஜ்பாத்’ என்ற ஹிந்திப் பெயர் வழங்கப்பட்டது. ஹிந்தியில் ‘ராஜ்பாத்’ என்பது ராஜாவின் பாதை என்று பொருள்படும் என்பதால், இது மறுபெயரிடுவதை விட வெறும் மொழிபெயர்ப்பைக் குறிக்கிறது. 75 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான காட்சிப் பொருளாக இந்தப் பாதை அறியப்படுகிறது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் பிப்ரவரி 2021 அறிக்கையின்படி, சுதந்திரத்திற்குப் பிறகு சென்ட்ரல் விஸ்டா அவென்யூவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. நிலப்பரப்பு மாற்றப்பட்டது, 1980 களில் புதிய வரிசையில் மரங்கள் சேர்க்கப்பட்டன, மேலும் ஒரு புதிய சாலை, ரஃபி அகமது கித்வாய் மார்க், வடக்கு-தெற்கு இணைப்பை மேம்படுத்துவதற்காக கட்டப்பட்டது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து தனது உரையின் போது, ​​பிரதமர் மோடி “காலனித்துவ மனநிலை” தொடர்பான சின்னங்களை ஒழிக்க வலியுறுத்தினார். இந்தியாவில் பிரிட்டிஷ் அதிகாரத்தை மீறியதற்காக அறியப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 28 அடி சிலை, ஒரு காலத்தில் ஜார்ஜ் V இன் சிலை இருந்த சாலையில் நிறுவப்படும், மற்றும் செப்டம்பர் 8 ஆம் தேதி கிராண்ட் கேனோபியின்போது மற்றொரு காலனித்துவ நினைவுச்சின்னமான இந்த ராஜ்பாத் உதிர்க்கபடும்.

கர்தவ்யா பாதை

மத்திய விஸ்டா மறுவடிவமைப்புத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் பிப்ரவரி 2021 இல் தொடங்கப்பட்டன, அதன் முதல் கட்டத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை மறுவடிவமைப்பு செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. “இது டெல்லியில் அடிக்கடி பார்வையிடப்படும் இடம் மற்றும் முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இருப்பினும், கழிப்பறைகள், பாதைகள், நியமிக்கப்பட்ட விற்பனை மண்டலங்கள், பார்க்கிங், சரியான விளக்குகள், பலகைகள் போன்ற பொது வசதிகள் இல்லை, ”என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2021 செய்திக்குறிப்பில் கூறியது.

மறுவடிவமைப்பில் இயற்கையை ரசித்தல், பசுமைப் பரப்பை 3.5 லட்சம் சதுர மீட்டரிலிருந்து 3.9 லட்சம் சதுர மீட்டராக அதிகரிப்பது மற்றும் மழைநீர் சேகரிப்புடன் புதிய நீர்ப்பாசன முறை ஆகியவை அடங்கும். கழிவுநீர் மறுசுழற்சி ஆலை, பொது கழிப்பறை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். நடைபாதைகள் மற்றும் கால்வாய்கள் மீது உள்ள பாலங்கள் தவிர, அவென்யூவில் 10 இடங்களில் விற்பனை பகுதி கட்டப்படும்.

குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நிறுவப்பட்டு அகற்றப்படும் தற்காலிக கட்டமைப்புகளுக்கு பதிலாக மடிக்கக்கூடிய இருக்கை ஏற்பாடுகள் செய்யப்படும். அவென்யூவை “நிஜமாகவே புதிய இந்தியாவிற்கு ஏற்ற” ஐகானாக மாற்றுவதே 608 கோடி ரூபாய் மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா அவென்யூ திட்டத்தின் நோக்கமாகும் என அரசு தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/rajpath-kartavya-path-delhi-central-vista-kingsway-history-explained-506771/