வியாழன், 8 செப்டம்பர், 2022

நீட் தேர்வு முடிவுகள்-பின் தங்கிய தமிழ்நாடு

 8 9 2022

நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி
நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் பதிவு
செய்து இருந்தனர். இதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர்.

இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.3 ஆகும்.

கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை தேர்ச்சி விகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.

2020-ல் 57.44% ஆகவும், 2021-ல் 54.40% ஆகவும் இருந்த தேர்ச்சி விகிதம் நடப்பு 2022-ல் 51.30% ஆக சரிந்துள்ளது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய போதும், தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது தமிழ்நாடு.

கடந்த ஆண்டில் 1.08 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியதில் 54.40% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் 1.34 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதிய போதும், 51.30% ஆக தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

அகில இந்திய வரிசையில் 23-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 28-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/neet-results-tamil-nadu-lagging-behind.html