8 9 2022
கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரியில் இருந்து 2வது நாள் பாத யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ராகுல் காந்தி தொடங்கினார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி நேற்று கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.
கன்னியாகுமரியில் இருந்து 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
2ம் நாளான இன்று கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை நடை பயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.
தினமும் 20 முதல் 25கி.மீ நடைபயணம் மேற்கொள்கிறார். குமரியில் அவருடன் 300 பேர் நடை பயணத்தில் பங்கேற்றுள்ளனர். பல மாநிலங்களில் இருந்து 118 பேர் குமரியில் இருந்து டெல்லி வரை அவருடன் பயணம் மேற்கொள்கின்றனர்.
முன்னதாக, வடக்கு நோக்கி ஒவ்வொரு மாநிலங்களாக காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரை தொடர்கிறது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உட்பட 118 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் ஒரு நாளைக்கு 20-25 கிலோ மீட்டர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். யாத்திரை மேற்கொள்பவர்களில் ராகுல் காந்தி உட்பட 9 பேர் 50 வயதிற்கு மேற்பட்டோர் ஆவர்.
20 பேர் 25லிருந்து 30 வயதுக்குள்ளும், 51 பேர் 31லிருந்து 40 வயதுக்குள்ளும், 38 பேர் 41லிருந்து 50 வயதுக்குள்ளும் உள்ளனர். 3,570 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட ’இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற இந்தப் பாத யாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைத்தார்.
source https://news7tamil.live/rahul-started-the-2nd-day-yatra-from-kumari.html