வெள்ளி, 4 மார்ச், 2016

10ம் வகுப்பு தேர்வு எழுதும் 77 வயது முதியவர்..


ராஜஸ்தான் மாநிலம் ஹோகரி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவ் சரண் யாதவ் (வயது 77) இவர் முதல் முறையாக 1968 ஆம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்.இந்த ஆண்டு 10 ந்தேதி யாதவ் தான் எழுதும் தேர்வில் தேர்ச்சி அடைவேன் என நம்புகிறார்.10 வகுப்பில் தேர்ச்சி அடைந்த பின்தான் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சபதம் செய்து இருந்தார் ஆனால் இதௌ வரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை அவருகு இந்த கணக்குபாடம் தான் மிக சவாலாக அமைந்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் நான் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். ஆனால் வேறு பாடத்தில் தோல்வி அடைந்து விடுகிறேன். குறிப்பாக நான் கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தில் போதுமான மதிப்பெண் பெற்றிருந்தேன் ஆனால் இந்தி மற்றும் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்து விட்டேன். இந்த முறை அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவேன் என நம்புகிறேன்.என யாதவ் உறுதிபட கூறினார்.
21 வருடங்களுக்கு முன்பு 1995 ஆம் ஆண்டு யாதவ் கிட்டத்தட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்து விட்டார். ஆனால் கணிதம் அவரது சீரழிவிற்கு காரணமாக அமைந்தது.கடந்த முறை சமூக அறிவியல பாடத்தில் தேர்ச்சி அடைந்தார். ஆனால் மற்ற அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தார்.
இந்த முறை சில பள்ளி ஆசிரியர்களிடம் டியூசன் எடுத்து இருப்பதாக யாதவ் கூறி உள்ளார்.
யாதவ் தனது மூதாதையர் வீட்டில் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் பிறந்து 2 மாதங்களில் அவரது தாயார் இறந்து விட்டார். 10 வயதாக இருக்கும் போது தந்தை மறைந்து விட்டார்.அவரது மாமாவுடன் வாழ்ந்து வந்தார்.அவருகு அரசு மற்றும் மத சார்பாகவும் அவருக்கு ஓய்வு ஊதியம் கிடைத்து வருகிறது.
இந்த முறை நான் நிச்சயம திருமணம செய்து கொள்வேன், நான் எனது மணகமளை பார்ப்பேன் என 77 வயது பிரமச்சாரி கூறி உள்ளா

Related Posts: