பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ராணுவத்தில் கிளார்க் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு எழுதுவதற்கு தேர்வர்கள் ஆயத்தமாகி இருந்த நிலையில் அவர்களுக்கு காத்திருந்தது ஓர் அதிர்ச்சி. தேர்வகள் அணிந்து வந்த ஆடைகளை களைந்து தரையில் அமர்ந்து தேர்வு எழுத வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. புகைப்பட ஆதாரமும் வெளியானது.
சம்பவம் குறித்து தேர்வு நடத்திய அதிகாரிகளிடம் கேட்டதற்கு முறைகேட்டை தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தது. இதை ஏற்காத பாட்னா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.