புதன், 2 மார்ச், 2016

தாழ்த்தப்பட்டோர் பட்டியல் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் தாக்கல்


indian-politicsசில மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் குறிப்பிட்ட ஜாதியினரை சேர்ப்பதற்கு வழிவகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த மசோதாவை சமூக நீதித் துறை அமைச்சர் தவார் சந்த் கெலோட், மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சில ஜாதியினரை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் இந்த மசோதா வழிவகை செய்யும். சில மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோருக்கான அந்தஸ்து பல்வேறு பகுதிகளில் வேறுபடுகிறது. உதாரணத்துக்கு ஒடிஸா மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தினர் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பார்கள். அதே சமூகத்தினர் வேறொரு பகுதியில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் வரமாட்டார்கள். இப்பிரச்னைகளைக் களைய இந்த மசோதா வழிவகுக்கும்.

Related Posts: