சனி, 12 மார்ச், 2016

தீவிரவாதிகளாக்கப்படும் அப்பாவி சமுதாயம்:

இருட்டடிப்புச் செய்யப்பட்ட
முஸ்லிம்களின் மனிதநேய சேவை;
தீவிரவாதிகளாக்கப்படும்
அப்பாவி சமுதாயம்:
- ஊடகத்துறை திருந்துமா?
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
இடம்: ஜிகே கார்டன் மர்கஸ், திருப்பூர்
நாள் :11.03.16
நாட்டை துண்டாட சதி செய்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி அப்துல் கரீம் துண்டா என்ற 74 வயது முதியவரை பல மாதங்களுக்கு முன்பு கைது செய்து 30க்கும் மேற்பட்ட வெடிகுண்டு வழக்குகளில் அவரைச் சேர்த்தனர்.
மீடியாக்களும் இந்த அவதூறை பரப்பின. முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் துண்டா மாபெரும் தீவிரவாதி என்று எழுதின. கடைசியில் அவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் பொய் என்பது நிரூபணமானது. இந்த செய்தியை மீடியாக்கள் திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்துவிட்டன.
அதுபோல டிஎன்டிஜே குவைத் மண்டலம் சார்பாக மணிகண்டன் என்ற ஒரு இந்து சகோதரரை தமிழகத்திற்கு அவரது உயிரைக்காப்பாற்றி நாம் அனுப்பிவைத்த நிகழ்வு நடந்தது. இதில் முஸ்லிம்கள் தான் இந்த மனித நேய சேவையாற்றினார்கள் என்ற செய்தி வெளியே வந்துவிடாமல் ரொம்ப கவனமாக மீடியாக்கள் காய் நகர்த்தி தஙகளது புத்தியை காட்டினர்.
அதே நேரத்தில் அருணாச்சலம் படத்தில் ரஜினியோடு நடித்த குரங்கு செத்த செய்தியையெல்லாம் கலர் பக்கத்தில் வெளியிட்டு தங்களது சுயரூபத்தை இந்த மீடியாக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய கேடுகெட்ட போக்கை கடைப்பிடிக்கும் மீடியாக்கள் திருந்துவார்களா?
விளக்க வீடியோ.

Related Posts: