புற்றுநோய் அறிகுறிகள், அவற்றின்
தன்மையை குறித்து இதோ அவரே
விளக்குகிறார்... புற்றுநோயின் பாதிப்பு
வயிறு. தொண்டை, மார்பகம், கல்லீரல், குடல்... என அனைத்து
உறுப்பிலும் ஏற்படும். இந்த நோய்
ஏற்பட பல காரணங்கள சொல்லலாம்
அவை புற்றுநோய் பாதிக்கும் உறுப்பை
பொறுத்து அமையும். குடல் மற்றும்
மலக்குடலில் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் முறையற்ற உணவு
பழக்கம். இது மட்டுமே கரணி என்று
என்று சொல்ல முடியாது. மரபணு,
பரம்பரை... என பல அம்சங்கள்
புற்றுநோய் தோன்றுவதற்கான
காரணங்களாய் இருக்கின்றன. பொதுவாவே புற்றுநோய் பாதிப்பை.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால்
மருந்து மாத்திரைகள் கொண்டே
குணப்படுத்த முடியும். ஆனால் நோய்
முற்றிய நிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிய வரும் போது
குணப்படுத்தும் சாத்தியம் மிகவும்
குறைவு. காரணம் குடல் புற்றுநோய்
பாதிப்பு இருந்தால். அவர்களுக்கு
மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் இந்த
பிரச்சனை மிகவும் சாதரணமானது.
வயிற்று பிரச்சனை இருந்தாலும்
மலச்சிக்கல் ஏற்படும் என்பதால்,
டாக்டரின் ஆலோசனை பெற
தவறிவிடுகிறர்கள். காலம் கடந்த
பிறகு புற்றுநோய் கண்டறிந்தால்,
அந்த கட்டத்திலிருந்துமருந்து மாத்திரையில் இதனை கட்டுப்படுத்த
முடியாது.
அறுவை சிகிச்சை ரேடியேஷன் மற்றும்
கீமோதெரபி மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும். குடல் புற்றுநோய் பொதுவான் பெயர் என்றாலும் அவை ஒவ்வொருவருக்கும்
மாறுபடும். எல்லாருக்கும் அவரவர்
உடல் நிலை, மரபணுக்கு ஏற்ப நோய்
கிருமிகள் மறுபடும், இருப்பினும் தற்போது மருந்து மாத்திரை, ரேடியேஷன், கீமோதெரபி என ஒரே
மாதிரியான சிகிச்சை முறைகளை
கடைப்பிடித்து வருகிறோம்.
அதே சமயம் நோயின் தன்மைக்கு
ஏற்ப மருந்து மாத்திரைகள் மற்றும்
சிகிச்சை முறையில் சில மற்றங்கள் ஏற்படுமே தவிர ஒவ்வொருவருக்கும்
தனித்தனி மாத்திரைகளை கொடுக்க முடியாது. ஆனால் இன்னும் பத்தாண்டுகளில் மருத்துவ துரையில்
பல மாற்றங்கள் ஏற்படும் என்பதில்
சந்தேகமில்லை. புற்றுநோயை ஆரம்ப
காலத்தில் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான விசயம். அதற்கு காரணம் நம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும். அவற்றை நாம்
அலட்சியப்புத்தி விடுகிறோம். நோய்
கிருமிகள் உடலில் பரவிய பிறகு டாக்டரின் உதவியை நாடி செல்கிறோம். குடல் புற்றுநோய்
பாதிப்பு இருந்தால், மலம் கழிப்பதில்
சிரம ம் ஏற்படும், மலம் கழிக்கும் போது ரத்தப்போக்கு இருக்கும்.
மலச்சிக்கல், மலம் கழிக்கும் போது
வலி, திடிரென்று உடல் எடை குறைதல் போன்ற பிரச்சினைகள்
இருந்தால் உடனடியாக டாக்டரை
அணுகி பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம், இவ்வாறு அவர்
கூறினார்.