ஞாயிறு, 13 மார்ச், 2016

கள்ள நோட்டுகளின் புகலிடமான குஜராத்- மீண்டும் ஒரு கும்பல் கைது


காந்தி நகர்: குஜராத்தில் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதையடுத்து மத்திய புலனாய்வுத்துறையால் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு கள்ள நோட்டு கும்பல் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இதன் புழக்கம் மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளநோட்டினைப் புழக்கத்தில் விடுபவர்கள் பெரும்பாலும் பங்களாதேஷினைச் சேர்ந்தவர்கள் என்றும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் பங்களாதேஷின் கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
KALLA NOTE
அவர்கள் மூலமாக உள்நுழையும் கள்ள நோட்டுகள், பல்வேறு ஏஜெண்ட்டுகள் மூலமாக இந்தியாவிற்குள் புழக்கத்தில் விடப்படுகின்றதாம். முக்கியமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகளவில் புழங்கப்படுகின்றதாம். கைது செய்யப்பட்டுள்ள சுஷந்தா சாகு ஒடிசா, உத்தம் குமார் சின்ஹா ஜார்க்கண்ட், புருஷோத்தம் குமார் ஜார்க்கண்ட், நிஷ்பால் மண்டேலா மேற்கு வங்காளம், ராமேஸ்வர் சாகு ஜார்க்கண்ட் ஆகியோர் மீது கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடும் 5 மாநிலங்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. அதில் முதலிடத்தில் குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் சட்டீஷ்கர் மாநிலமும் தொடர்ந்து ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts: