இவை அனைத்துமே எளிதில் தொத்திக்கொள்ளும் தொற்று நோய்கள். முதலில் தோன்றும் ஜுரத்தின் போதே இருமல் வழியாகவும், நோய் பரவக்கூடும். எனவே தும்மல் வழியாகவும், அவர் படுக்கும் படுக்கை வழியாகவும் நோய் பரவக்கூடும். எனவே அம்மை நோய் கண்டவரை தனி அறையில் வைத்து மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.
தடுக்க என்ன செய்யலாம்
சரியான நேரத்திற்கு உணவு உண்பது, சரியான நேரத்திற்கு தூங்க செல்வது, உடலுக்கும், வயதுக்கும் தகுந்த உழைப்பு, உழைப்புக்கு தகுந்த ஓய்வு, உடலை குளிர்விக்கும் உணவுகள், பழங்கள், காய்கள், கீரைகள், தயிர், மோர் சேர்ப்பது, களைப்பு தீர குளிப்பது, உடலின் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக் கொள்வது போன்றவற்றால் மேற்கண்ட அம்மை நோயை சரிவர கண்காணித்து குணப்படுத்தாத நிலையில் மூளை, நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்படக்கூடும்.
மான்கொம்பு பற்பத்தை 200 மில்லிகிராம் 3 வேளை பாலில் கலந்து கொடுக்கலாம். வேப்பிலை, மஞ்சள் இரண்டையும் சம எடை எடுத்து அரைத்து மேல் பூச்சாக பூசலாம். சந்தனம் (ஒரிஜினல்) மேல் பூச்சாக பூசலாம். உள்ளுக்கும் 1 கிராம் இருவேளை கொடுக்கலாம். படுக்கை துணிகளை தினமும் மஞ்சள் தினமும் மஞ்சள் கரைத்த நீரில் அலம்பி நிழலில் உலர்த்தி பயன்படுத்தலாம்.
வீட்டு தலை வாசல், நில வாசலில் வேப்பிலையை நிறைய சொருகி வைக்க, தோரணம் கட்டி தொங்கவிட வைரஸ் கிருமிகள் தாக்கம் குறையும். காய்ச்சல் அதிகம் இருப்பின் நிலவேம்பு இலைச்சாறு அல் லது பப்பாளி இலைச்சாறு 300 மில்லி அளவு 3 வேளை தேனில் கலந்து தரலாம். மலக்கட்டு இருப்பின் திரி பலா பொடியை 5 முதல் 10 கிராம் இளவெந்நீரில் கலந்து காலை, மாலை தரலாம். குளியல் பொடியாகவும் திரிபலா பொடியை பயன்படுத்தலாம்.