புதன், 9 மார்ச், 2016

இந்துத்துவா பயங்கரவாதம் : விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “துர்காவாகினி” பற்றி தெரியுமா உங்களுக்கு?


ஆர்.எஸ்.எஸ். 15 வயது முதல் 25  வயது வரையிலான பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களை முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கெதிராக மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக உருவாக்கி வருகிறது.
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “துர்காவாகினி” பற்றி தெரியுமா உங்களுக்கு?
‘கொலை செய்வேன்; குண்டுகள் தயாரிப்பேன்” 
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அரசியலை முன்னெடுப்பதாக கூறி கடந்த 20 வருடங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் , ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் போன்ற அமைப்புகள் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது  என்றால் அது கண்கூடான உண்மையே.
.ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை, அதன் வேர்களுக்குத் திருப்பி அழைத்து வருவதாகக் கூறி பிரச்சாரம் செய்யும் இந்த அமைப்புகளுக்கு, வட இந்தியாவின், ஒடுக்கப்பட்ட இன மக்களும் தீவிர ஆதரவாளர்கள் தான்.
இந்த அமைப்புகளுக்கு மதச்சார்பின்மை என்றாலே ஒவ்வாமைதான்.
.இந்து மரபுகள் என்று கூறப்படுபவைகளை நிலை நிறுத்தும் ஹிந்துத்துவாதான் இவர்களின் ஒரே கொள்கை.
 விஷ்வ ஹிந்து பரிஷத்  வளர்த்தெடுத்த அமைப்புதான் “துர்காவாகினி”. இந்து கலாசாரத்தை போதிப்பதாகக் கூறி, 15 வயது முதல் 25  வயது வரையிலான இளம் பெண்களுக்கு, இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வெறும் பயிற்சி அல்ல தீவிர பயங்கரவாத பயிற்சி.

Related Posts: