காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கெயில் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் தில்லியில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒருங்கிணைப்பாளர்
பி.ஆர். பாண்டியன் மனித சங்கிலி போராட்டத்தற்கு தலைமை தாங்கினார். திருவாரூர், நாகை, தஞ்சாவூர், கடலூர், திருச்சி, சிவகங்கை, மதுரை, தேனி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 2014, டிசம்பர் 14 முதல் 3 நாட்கள் தமிழக விவசாயிகள் தில்லியில் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர் என்பதும் அதை பிரதமர் மோடி சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முடித்து வைத்ததோடு தமிழக விவசாயிகளின் கோரிக்கையை பிரதமர் கனிவுடன் பரிசீலிக்க இருப்பதாக உறுதி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.