பெர்முடா முக்கோணத்தில் மறந்திருக்கும் மர்மம் குறித்து அறிவியல் ஆய்வாளார்கள் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பெர்முடா முக்கோணத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் இதுவரை பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் அந்த பகுதியில் ஏன் கப்பல்களும் விமானங்களும் மாயமாகிறது என எவராலும் கண்டுபிடித்து கூற முடியவில்லை.
முதன் முறையாக பெர்முடா முக்கோண ரகசியம் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளன.
பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள Barents கடற்பகுதியின் அடித்தட்டில் பாரிய எரிமலைவாய்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த எரிமலைவாய்கள் அரை மைல்கள் பரந்து விரிந்து கிடப்பதாகவும், இதன் ஆழம் சுமார் 150 அடி இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
இதன் காரணமாகவே நார்வே கடற்பகுதியில் அதிக இயற்கை வாயு கிடைப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த எரிமலைவாயில் இருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு அப்பகுதிகளில் சிதைவுகளை உருவாக்கி பின்னர் வெடித்துச்சிதறுகின்றது.
அதிக எண்ணிக்கையிலான எரிமலைவாய்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுவதால், இவைகள் அளவுக்கு அதிகமான வாயுவை வெளியேற்றுகின்றன.
எரிமலைவாய் அடிக்கடி வெடித்துச்சிதறுவதால் அப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்துகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த காரங்களால்தான் பெர்முடா கடற்பகுதியில் கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் மாயமாவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் நடைபெறும் மாறுதல்கள் பெரும் பனிச்சரிவு போன்றோ அல்லது அணு எதிர்வினை போலவோ நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி கடல் மீத்தேன் வாயுவுடன் கலந்து கொதிநிலைக்கு வருவதால் கப்பல்கள் மூழ்கியதும் மாயமாகின்றது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.