புதன், 7 ஆகஸ்ட், 2019

மேகதாது விவகாரம் - கைவிரித்த மத்திய அரசு...! August 07, 2019

Image
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுமானால் தமிழக அரசின் ஒப்புதல் அவசியம் என்ற வாதத்தை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உறுதி செய்துள்ளது. 
கடந்த ஜுன் மாதம் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணைகட்ட முயற்சி செய்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல் என குறிப்பிட்டுருந்தார். 
தமிழக அரசின் ஒப்புதல் இன்றி நடக்கும் இந்த முயற்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார். மேலும் கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அறிவுறுத்துமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டிருந்தார். 
ஆனால் கர்நாடக அரசின் விண்ணப்பத்தை ஜூலை 19ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறை பரிசீலித்தது. எனினும் தற்போது அணை கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுமானால் தமிழக அரசின் ஒப்புதல் அவசியம் என்ற வாதத்தை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உறுதி செய்துள்ளது.

credit ns7.tv