வியாழன், 24 மார்ச், 2016

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: இன்று உலக தண்ணீர் தினம்


water_002நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப அனைத்து தேவைகளுக்கும், அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்று என்றால் அது தண்ணீர் தான்.

சமைக்க, விவசாயம் செய்ய, வீட்டு தேவைகளுக்கு என இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
ஆனால் மிக முக்கியமானது சுத்தமான தண்ணீர், அசுத்தமான தண்ணீர் பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்து விடுகின்றது.
சாதாரண தலைவலி, சோர்வு, மூட்டு வலி இவையெல்லாம் தண்ணீர் குடித்தாலே சரியாகிவிடும். 3 நாளுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் ஒருவர் உயிரோடு இருக்க முடியாது.
நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உதாரணத்திற்கு, 12 அவுன்ஸ் தண்ணீர் நீங்கள் குடித்தால் 8 அவுன்ஸ் தண்ணீரை உடல் 15 நிமிடத்தில் உறிஞ்சி விடும்.
நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
மனித உடலில் தண்ணீரின் பங்கு:
• மனித மூளையில் 70% நீர்தான்.
• நான் மூச்சு வெளிவிடுவதில் 1 கப் நீர் (250 மி.லி.) வெளியேறுகின்றது.
• ரத்தத்தின் 80% நீர்தான்.
• எலும்புகளில் 22% நீர்தான்.
• சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் உடலில் திசுக்களுக்கு கொண்டு செல்வது நீர்தான்.
• தசைகளின் 75 % நீர்தான்.
• உணவை சக்தியாக மாற்ற உதவுவது நீர்தான்.
• ஆக்ஸிஜனை மூச்சுக்காக ஈரப்படுத்துவது நீர்தான்.