வியாழன், 24 மார்ச், 2016

'AIMIM' கட்சி ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்காது:


'சேப்பாக்கம்' விஷயத்தில் 'இன்ஷா அல்லாஹ்' சதிகளை முறியடித்து சாதனை படைப்போம்..!
முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு எதிராக 'மஜ்லிஸ் கட்சி' களம் இறங்குவதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளது.
வருகின்ற சட்டசபை தேர்தலில் 'ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன்' '‪#‎AIMIM‬' கட்சியின் சார்பில்‪#‎சேப்பாக்கம்‬ ‪#‎திருவல்லிக்கேணி‬ உள்ளிட்ட சில தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தான் நிறுத்தப்படுவார் என்று ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அங்கு 'AIMIM' போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில், முஸ்லிம் லீக் கட்சிக்கு அத்தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
முஸ்லிம் லீக் மட்டுமல்ல, மனிதநேய மக்கள் கட்சி, '‪#‎எஸ்டிபிஐ‬' என எந்த முஸ்லிம் கட்சியின் வேட்பாளர்களையும் எதிர்க்கும் எண்ணத்தில் 'மஜ்லிஸ் கட்சி' இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம், இதனால், 'ஆவடி' உள்ளிட்ட வேறு 10 தொகுதிகளின் பட்டியல் ஹைதராபாத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு : 'சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி' தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்குவதைப் போல ஒதுக்கிவிட்டு, பின்னர் திமுக அதனை திரும்ப பெற்று, ஜெ.அன்பழகன், தயாநிதி மாறன் உள்ளிட்ட வேறு எவரையும் நிறுத்துமானால், அதனை எதிர்கொள்ளவும் மஜ்லிஸ் கட்சி தயாராகவே உள்ளது.
கடந்த காலங்களில் 'முஸ்லிம் லீக்'குக்கு சில தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, பின்னர் திமுக அதனை திறும்ப பெற்ற வரலாறு உண்டு என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடவும் மஜ்லிஸ் முடிவெடுத்துள்ளது.
இவண் : J.ஜாகிர் ஹுசைன்,
தமிழ் மாநில செய்தி தொடர்பாளர், AIMIM கட்சி, தமிழ்நாடு.