சனி, 26 மார்ச், 2016

மன அழுத்தம்


ht3692நாட்டின், மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மனஅழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் என்பது ஒரு மனநோய்.மன அழுத்தம் ஏற்படும் போது அழுகை, சின்ன சின்ன விஷயங்களுக் கெல்லாம் உணர்ச்சிவசப்படுதல், எந்த நேரமும் சோகமாகவும், தனிமையாகவும் இருப்பது ஆகியவை  நடக்கும். இவை சாதாரண மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்.

அதிகமாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், தன்னம்பிக்கை குறைந்து, தற்கொலை எண்ணம் மேலோங்கும். தற்கொலை எண்ணம், ஓரிரு நொடிகளில் ஏற்பட்டு, செயலாக மாறக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.

சிதைந்து போன உறவு முறைகள், நகரத்தில் இயந்திர மயமான வாழ்க்கை, கூட்டுக் குடும்ப மகிழ்ச்சி காணாமல் போனது, தன் வேலை, தன் வீடு என்ற குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி, தனக்கு உறவுகள் யாரும் இல்லையே என்ற பாதுகாப்பற்ற உணர்வு, என மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகமாகி, கட்டுப் பாடற்ற நிலைக்கு செல்லும் போது தான், மனநோய் ஏற்படுகிறது.

வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் துயர சம்பவங்கள், பொருளாதார பின்னடைவுகள் , தோல்விகள் போன்றவை, மன அழுத்த நோய், உடனடியாக வெளிப்பட காரணமாக அமைகின்றன. ஒரு சிலருக்கு, எந்த வித காரணம் இல்லாமலும், மன அழுத்த நோய் ஏற்படலாம் அல்லது பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம். தன்னம்பிக்கையற்ற உணர்வு, எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்து இருப்பது, அதிக ஒழுங்கு எதிர் பார்ப்பது போன்ற ஆளுமை குணம் கொண்டவர்களுக்கும், மன அழுத்த நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

ஒரு சிலருக்கு, எந்த வித காரணம் இல்லாமலும், மன அழுத்த நோய் ஏற்படலாம் அல்லது பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம். தன்னம்பிக்கையற்ற உணர்வு, எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்து இருப்பது, அதிக ஒழுங்கு எதிர்பார்ப்பது போன்ற ஆளுமை குணம் கொண்டவர்களுக்கும், மன அழுத்த நோய் வர வாய்ப்புகள் அதிகம். அதற்கு இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவ ரீதியாக சிகிச்சைகள் கொடுத்து , சரி செய்யலாம். அல்லது, அவர்களின் எண்ண ஓட்டங்களை மாற்றியமைப்பதன் மூலம், மனஅழுத்தத்தை சரி செய்யலாம். மனதை எந்த விஷயமும் அழுத்த விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மேலும் தியானம் செய்வது மனதிற்கு அமைதியை தரும். அதே போல, பாசிடிவ் எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். அதுவும் மன நோயில் இருந்து விடுபட உதவும். தனிமையை தவிர்க்க வேண்டும். உறவுகளுடன் பேசி மகிழலாம். யோகா, நடைபயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடலாம் . எந்த ஒரு விஷயத்தையும் மனதில் போட்டு தன்னை தானே வருத்திக் கொள்ளாமல் அதை தகுந்த நண்பரிடமோ அல்லது மனைவியிடமோ பேசி அதற்கான உரிய தீர்வை காணலாம் . இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டால், இந்த நோயில் இருந்து தப்பிக்கலாம்.

Related Posts: