வெள்ளி, 4 மார்ச், 2016

தமிழக அரசுக்கு கண்டன அறிக்கை. ...


சகோதரி நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய கோரி முதல்வரின் உத்தரவின் பேரில் மத்திய உள்துறை செயலாளர் அவர்களுக்கு தமிழக உள்துறை செயலாளர் ஞானதேசிகன் அவர்கள் கடிதம் அனுப்பி உள்ளார். ..
25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் சகோதரி நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசின் முடிவை இந்திய தேசிய லீக் கட்சி வரவேற்கிறது. ....
அதே போன்று சுமார் 19 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் 49 முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை குறித்து தமிழக முதல்வர் மெளனம் காப்பது ஏன் ?
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை குறித்த விஷயத்தில் தமிழக அரசின் பாரபட்சமான முறையை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ....
வருகிற சட்ட மன்ற தேர்தலில் தமிழக அரசின் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்த பாரபட்ச செயல் பாட்டை அ.தி.மு.க. அரசுக்கு எதிராக தமிழக முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ...
ஏதோ சில முஸ்லிம் அமைப்புகள் தலைவர்களை சரிகட்டிவிட்டால் முஸ்லிம் வாக்காளர்களை கவர்ந்து விடலாம் என மனப்பால் குடிக்க வேண்டாம். ...
முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கையை யார் ஆதரிக்கின்றார்களோ அவர்களுக்கு தான் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். ...
தமிழக அரசின் பாரபட்சமான முறையை வன்மையாக கண்டிக்கிறது. .

Related Posts: