தேவையான பொருட்கள்:
வஜ்ஜிரம் மீன்-1/2 கிலோ
முட்டை-4
மக்காச்சோள மாவு-4
மிளகாய்ப்பொடி-1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி-1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, எண்ணெய் மற்றும் உப்பு.
செய்முறை:
மீனை நன்கு சுத்தம் செய்து சதையை மட்டும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும். அத்துடன், மிளகாய்த்தூள், மக்காச்சோள மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையை சேர்த்துக் கலக்கவும்.
இந்தக் கலவையில் மீன் துண்டுகளைப் போட்டு புரட்டி, அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் எண்ணெயில் பொறித்து எடுத்தால், சுவையான மீன் பக்கோடா ரெடி