பழைய எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்து தங்கத்தை எளிதாகப் பிரித்தெடுக்கும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் மொபைல் போன், டிவி உள்ளிட்ட எலெட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் டன் கணக்கிலான தங்கம் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பயன்படுத்தப்பட்டு குப்பைகளாகத் தூக்கி எறியப்படும் பழைய எலெட்ரானிக் பொருட்களில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கப்படுவதில்லை. இதற்கான நடைமுறைகள் சிக்கலாக இருந்ததே காரணமாக இதுநாள் வரை கூறப்பட்டு வந்தது.
இந்தநிலையில், பயன்படுத்தப்பட்ட பழைய எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்து தங்கத்தை எளிதாகப் பிரித்தெடுக்கும் முறையினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான எளிய நடைமுறைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் உலகின் தங்க தேவையைச் சமாளிப்பதுடன், தங்கம் தோண்டியெடுக்கும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
September 01, 2016 - 08:50 AM