1. புதிய சட்டம் இந்த ஆண்டு (2016) டிசம்பரில் இருந்து செயல்படுத்தப்படும்.
2. புதிய சட்டத்தின்படி தொழிலாளர் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் இருப்பார். (Sponsor முறை நீக்கப்படும்)
3. Cancel செய்து நாடு சென்றால் 2 ஆண்டுகள் தடை இனி இல்லை.
4. புதிய நிறுனவத்தில் தொழில் பெற பழைய நிறுவனத்தின் NOC தேவை இல்லை.
5. Cancel செய்து நாடு சென்றால் புதிய விசா ஒன்றை பெற்று மீண்டும் மறுநாளே கத்தார் செல்ல முடியும்.
6. நாடு செல்வதட்கு, வேலை புரியும் நிறுவனத்தில் இருந்தது Exit Permit தேவை இல்லை.
7. நாடு செல்ல 3 தினங்களுக்கு முன்பு வேலை புரியும் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும் மற்றும் Metrash 2 எனும் மொபைல் அப்ளிகேஷன் ஊடக Exit Permit விண்ணப்பிக்க வேண்டும்.
8. அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த ஆண்டு (2016) இறுதியில் புதிய தொழிலாளர் ஒப்பந்தம் மாற்றப்படும்.
9. பழைய ஒப்பந்தத்தில் வேலைக்குச் சேர்ந்த திகதியில் இருந்தே ஒப்பந்த காலம் கணக்கிடப்படும்.
10. தொழில் ஒப்பந்தங்கள் கத்தார் தொழிலாளர் அமைச்சகத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
11. உங்கள் ஒப்பந்தம் கால எல்லை இல்லாமல் இருப்பின் 5 வருடத்திற்கு பின்னே புதிய தொழில் ஒன்றை பெற முடியும்.
12. உங்கள் ஒப்பந்தம் கால எல்லை குறிப்பிட்டு இருந்தால் குறிப்பிட்ட ஒப்பந்தம் நிறைவடைந்ததும் NOC இல்லாமல் புதிய வேலை ஒன்றை பெற முடியும்