வெள்ளி, 2 செப்டம்பர், 2016

மீண்டும் ஒரு சமூக நல்லிணக்கம்..



மீண்டும் ஒரு சமூக நல்லிணக்கம்..
அதுவும் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட அயோத்தியில்....
17ஆம் நூற்றாண்டில் அயோத்தியில் முகலாயப் பேரரசால் ஆலம்கிரி மஸ்ஜித் கட்டப்பட்டது. பின்னர் 1765-ம் ஆண்டு நவாப் ஷுஜா உத் தவ்லா, ஆலம்கிரி மஸ்ஜித் அமைந்துள்ள இடத்தை அயோத்தி ஹனுமன் கோயிலுக்கு தானமாக வழங்கினார். (பள்ளிவாசல் இருந்த நிலத்தை ஹனுமன் கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தது ஆச்சரியம்.) இதன்பிறகு பல நூற்றாண்டு காலமாக இந்த இடம் அயோத்தி ஹனுமன் கோயில் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.

இந்நிலையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலம்கிரி மஸ்ஜித் கட்டிடம் பாழடைந்து விட்டதால் மசூதிக்குள் முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்த உள்ளூர் மாநகராட்சி தடை விதித்ததுள்ளது. இதனையடுத்து மசூதியை சீரமைக்க அனுமதி கோரி, உள்ளூர் முஸ்லீம்கள் குழுவினர் ஹனுமன் கோயில் தலைமை பூசாரி மஹந்த் கியான் தாஸை சந்தித்தார். தலைமை பூசாரியை சந்தித்து பேசிய முஸ்லிம் குழுவிற்கு, ஒரு இன்ப அதிர்ச்சி கிட்டியது. மசூதியை மறுகட்டுமானம் செய்ய அனுமதி அளித்ததுடன், கட்டுமானத்திற்கான முழு செலவையும் ஏற்க உள்ளதாக ஹனுமன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

''ஹனுமன் கோயில் நிர்வாக செலவில், முஸ்லிம் சகோதரர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ளலாம். மேலும் புதிய மசூதி கட்டும் வரை, கோயில் பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொள்ளலாம் என கூறியுள்ளோம்'' என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஹனுமன் கோயில் தலைமை பூசாரி மஹந்த் கியான் தாஸ். இவர் ரமலான் மாதத்தில் அயோத்தியில் முஸ்லிம்கள் இப்தார் வைத்தவர் என்பது சிறப்பு தகவல்.
நன்றி : விகடன்