திங்கள், 24 ஏப்ரல், 2017

38 இந்தியர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிரிட்டன் போலீசார் April 24, 2017


விசா காலம் முடிந்தும் தங்கள் நாட்டில் தங்கி இருந்ததாக கூறி 38 இந்தியர்களை, பிரிட்டன் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் பிடித்து வைத்துள்ளனர்.

பிரிட்டனின் லீசெஸ்டர் நகரில் உள்ள இரண்டு பெரிய நிறுவனங்களில் குடியேற்ற அதிகாரிகள் கடந்த வாரம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விசா காலம் முடிந்த 31 இந்தியர்கள், அந்நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 பேர் சட்டவிரோதமாக குடியேறியதும் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 38 பேரில், 18 பேரை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts: