திங்கள், 24 ஏப்ரல், 2017

டெல்லியில் இருந்து ரயில் மூலம் தமிழகம் புறப்பட்ட போராட்டம் விவசாயிகள்! April 24, 2017

டெல்லியில் இருந்து ரயில் மூலம் தமிழகம் புறப்பட்ட போராட்டம் விவசாயிகள்!


டெல்லியில் 41 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக் குழுத் தலைவர் அய்யாகண்ணு, மே 25ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்தில் 15 நாள் கால அவகாசம் அளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் தாங்கள் 1 மாதத்திற்கும் மேல் கால அவகாசம் அளிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் அய்யாகண்ணு குறிப்பிட்டுள்ளார். 

அதற்குள் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் என நம்புவதாகவும், ஒருவேளை ஏற்கப்படவில்லை என்றால், மே 26-ம் தேதிக்குப் பிறகு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட 71 விவசாயிகளும் இரவு 10.30 மணியளவில் ரயில் மூலம் தமிழகம் புறப்பட்டனர்.