இந்தியாவில் கடந்த ஆண்டில் தினமும் சராசரியாக 410 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
2015ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2016ல் அதிகமானோர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. 2015ம் ஆண்டு கணக்கெடுப்புப் படி தினசரி 400 பேர் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டிருந்தது.
2015ல் 1.46 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், 2016ல் இந்த எண்ணிக்கை 1.50 லட்சமாக உயர்ந்துள்ளது.
1970ல் இருந்து கணக்கிடுகையில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அதிகரித்துள்ள சாலை விபத்துகளின் எண்ணிக்கையே 2016ல் நாட்டின் ஒட்டுமொத்த சாலை விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை இந்தளவு உயர காரணம் என கூறப்படுகிறது.
முறையாக பராமரிக்கப்படாத சாலைகள், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காத ஓட்டுநர்கள், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வது போன்றவையே ஒட்டுமொத்த சாலைவிபத்து உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக உள்ளது.