திங்கள், 10 ஏப்ரல், 2017

குடிநீரின்றி மயங்கிய யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை! April 10, 2017


சத்தியமங்கலம் அருகே குடிநீர் இன்றி மயங்கிய யானைக்கு வனத்துறையினர் உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகேயுள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் 20 வயதுள்ள பெண்யானை ஒன்று குட்டியுடன் உலாவியது. இந்நிலையில் உணவு குடிநீர் கிடைக்காமல் தவித்த தாய் யானை திடீரென மயங்கி விழுந்தது.

இதுகுறித்து கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த  கால்நடை மருத்துவர்கள் மூலம் பெண்யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், உணவு மற்றும் குடிநீரும் வழங்கப்பட்டது. 

அப்போது, தாய்யானையை விட்டு நகராமல், குட்டியானை அதனை சுற்றி வந்து தனது பாசத்தை வெளிப்படுத்தியது காண்போரை நெகிழச் செய்தது. 

Related Posts: