cyclone amphan at bay of Bengal live Updates: வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து, வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது . நேற்று, (16 மே அன்று) காலை ஐந்தரை மணிக்கு அட்சரேகை 10.4°வடக்கு மற்றும் தீர்க்கரேகை 87.0°டிகிரி கிழக்கில், பாராதீப்பிற்குத் (ஒடிசா) தெற்கே சுமார் 1100 கிலோ மீட்டர் தொலைவிலும்; திகாவுக்கு (மேற்குவங்கம்) தெற்கே 1250 கிலோமீட்டர் தொலைவிலும்; கெப்புபராவிற்கு (பங்களாதேஷ்) தெற்கு-தென்மேற்கு திசையில் 1330 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது விரைவாக மேலும் வலுவடைந்து இன்று கடும் சூறாவளிப் புயலாக (ஆம்பன் புயல்) உருவெடுக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனையடுத்து, தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் புதுவையில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
credit indian express.com