அதிமுக அரசு மீதான அச்சம் மற்றும் பொறாமையால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழக விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்வது, உரிய வறட்சி நிவாரணம் பெறுவது உட்பட தமிழக நலன்கள் குறித்து பேசாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீணடித்து விட்டார் என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் நலன்கள் சார்ந்து தாம் பேசிய தகவல்களை பட்டியலிட்டுள்ளார். மேலும் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்து விட்டது என்னும் அச்சம் மற்றும் பொறமை காரணமாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாகவும் முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் தமது உரையை நன்கு படித்துப் பார்த்தால் எந்தந்த வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை அறியலாம் எனவும் முதல்வர் கூறியுள்ளார். இந்த செய்திகள் மு.க.ஸ்டாலினுக்கு தெரிகிறதோ இல்லையோ, தமிழக மக்களுக்கு நன்றாக புரியும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.