சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் முருகன். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருப்பாச்சேத்தியில் வைத்து கண்ணன் என்பவர் தலைமையில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்தது.
கண்ணன் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்றும் சாதிய காரணங்களுக்காக இந்த கொலை நடந்தது எனவும் கூறப்பட்டது. இதற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக முருகன், தனது வீட்டின் அருகே இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த கண்ணனை, தனது கும்பலுடன் சேர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்தது. இதுதொடர்பாக திருப்பாச்சேத்தி போலீசார் முருகன் தரப்பினரை கைது செய்து சிறையிலடைத்தனர். இவ்வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முருகன் வேம்பத்துர் வராமல் மதுரை மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் உள்ள தனது உறவினர்களின் மத்தியில் வசித்து வந்தார்.
இதற்கிடையில் முருகன் தரப்பினரால் கொலை செய்யப்பட்ட கண்ணனின் உறவினரும் புதுகுளத்தை சேர்ந்த பிரபல ரவுடியுமான பிரபு என்பவர் முருகனை கொலை செய்ய ஏழு முறை முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த வெள்ளைத்துரையால் திருப்பாச்சேத்தி எஸ்.ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் பிரபுவும் அவரது கூட்டாளி பாரதியும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பிரபு இறந்த பின்னரும் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்த முருகன் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கியாவது வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என போலீஸிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த பத்தாம் தேதி அன்று சிவகங்கை கோர்ட்டில் கண்ணன் கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு இருசக்கரவாகனத்தில் வந்த முருகனை 6 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது.
இந்த படுகொலை சம்பந்தமாக திருப்பாச்சேத்தி காவல்துறையினர் வி.புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் ராஜ்குமார்,முத்துராஜா மற்றும் முத்துப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். இதனையடுத்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சோணைமுத்து,அய்யனார் ஆகிய இரண்டு பேர் சரணடைந்தனர்.
இந்நிலையில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை என்றும் முருகனின் கொலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமும் ஒரு காரணம் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த அடுத்தடுத்த கொலைகள் சாதிய உணர்வுகளாலேயே நடைபெற்றுள்ளன என கூறும் அப்பகுதி மக்கள் கொலை சம்பவங்களை தடுப்பதற்கு சாதி உணர்வுடன் செயல்படும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.