நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நெல்லை நகரில் உள்ள லட்சுமி தியேட்டர் எதிர்புறம் ஆதினத்திற்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. கடந்த 2010 ஆண்டு இந்த இடத்தில் சிவசுப்பிரமணியன் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து கட்டிடம் கட்டியுள்ளார். இதுதொடர்பாக ஆதினம் தரப்பில் கடந்த 2010-ம் ஆண்டு நெல்லை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கில் வரும் 29-ந் தேதி நெல்லை உரிமையியல் நீதிமன்றத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.