செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அண்டை நாடுகளின் வளர்ச்சிக்காக இந்திய அரசு பெரும் தொகையை நிதியுதவியாக வழங்கி வருகிறது April 25, 2017




அண்டை நாடுகளின் வளர்ச்சிக்காக இந்திய அரசு பெரும் தொகையை நிதியுதவியாக வழங்கி வருகிறது. இதில் இலங்கைக்குக் கொடுக்கப்படும் நிதி உதவி கடந்த 17 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்துள்ளது.

இது குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது,

►கடந்த 17 ஆண்டுகளில், இந்தியா இலங்கைக்கு அளித்து வந்த நிதி உதவி 13 மடங்கு அதிகரித்துள்ளது. 

►அதன்படி, இலங்கைக்கு 2,332 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளது இந்திய அரசு. 

►2001-2017 - இந்தியாவிடம் இருந்து நிதி உதவி பெறுவதில் பூடான் முதலிடம் - 31,587 கோடி ரூபாய். 

►பூடானில் நீர் மின் சக்தி உற்பத்தி செய்வதற்கு இந்திய அரசு உதவி வருகிறது. 

►2001-2017 - 4,463 கோடி ரூபாய் இந்தியாவின் நிதி உதவியுடன் அப்கானிஸ்தான் இரண்டாவது இடம். 

►அப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தை கட்டுவதற்கு இந்திய அரசு உதவியது குறிப்பிடத்தக்கது. 

►மேலும் 2001-2017-ல் ஆப்பிரிக்க நாடுகளுக்கான இந்தியாவின் நிதியுதவி 57 மடங்கு அதிகரித்துள்ளது. 

►நேபால், வங்கதேசம், மியான்மர், மாலதீவுகள் போன்ற நாடுகளுக்குப் பல ஆயிரம் கோடிகள் நிதி உதவி இந்தியாவிடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.