வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 3லிருந்து 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் 42 முதல் 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகும் எனவும், சென்னையில் அதிகபட்சம் 37 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையும், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்ஷியஸ் வெப்பமும் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.