குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்கவுள்ள எம்பி, எம்எல்ஏக்களில் 33 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, தேர்தல் ஆணையத்திடம் அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்களின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மக்களவையில் 34 சதவீத எம்.பிக்களும், மாநிலங்களவையில் 19 சதவீத எம்.பிக்களும், மாநில சட்டமன்றங்கள், யூனியன் பிரதேசங்களில் 33 சதவீத எம்எல்ஏக்களும் குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் ஆவர்.
நாளைய தேர்தலில் வாக்களிக்கவுள்ள எம்பி, எம்எல்ஏக்களில் 71 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பெண்கள் 9 சதவீதமே என்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.