சென்னை எண்ணூர் பகுதியில் நீர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டிருப்பதால் சென்னையில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் வடசென்னை நீரில் மூழ்கும் என இயற்கை ஆர்வலர்கள், மீனவர்கள் எச்சரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் கடல் பகுதியில் இருக்கும் நீர் வழித்தடங்கள், உப்பங்கழிகள் வழியாக நீர் கடலை வந்தடைக்கிறது. குறிப்பாக கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு, புழல் ஏரியின் உபரி நீர் அனைத்தும் எண்ணூர் நீர்வழித்தடங்கள் மூலமாகவே கடலை அடைக்கின்றன.இத்தகைய நீர் வழித்தடங்கள் அனைத்தும் இன்று ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார் எண்ணூர் மீனவர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்வராஜ்.
இதை நிரூபிக்கும் விதமாக 2009ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஜெசு ரத்தினம் என்பவர் சில தகவல்களையும், எண்ணூர் பகுதி ஆறுகளின் வரைப்படங்களையும் பெற்றுள்ளார். அதில் எண்ணூர் பகுதியில் இருந்து திருவள்ளூர் வரை 6 ஆயிரத்து 500 ஏக்கர் கடலோர பரப்பில் எந்த விதமான மேம்பாட்டு பணிகளையும் செய்ய அனுமதி இல்லாத மண்டலமாகவும், கடல் நீரோட்ட நீர்நிலைகள் உள்ள பகுதியாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் கடற்கரை வள மையத்தை சேர்ந்த ஜேசுரத்தினம்.
இவ்வாறு 2009ம் ஆண்டு பெறப்பட்ட எண்ணூர் கடலோர பகுதி வரைபடத்தில் குறிப்பிட்டுள்ள நீர்வழித்தடங்கள் எதுவும் தற்போது இல்லை என 2017ம் ஆண்டு ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட வரைபடத்தில் தெரிகிறது. இதையடுத்து, நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை விசாரணை நடத்தி ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது நீர் கடலுக்கு செல்லமுடியாமல் வடசென்னைக்கு திரும்பி விடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனால் வடசென்னை பகுதிகளான பொன்னேரி, மாதவரம், திருவொற்றியூர் போன்ற பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியனந்த் ஜெயராம்.
எண்ணூர் பகுதியில் ஆறுகளும், நீர் வழித்தடங்களும் இருப்பதாகவும், இல்லை என்றும் இரு வேறு தகவல்கள் வரைப்படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பதே மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.