புதன், 6 செப்டம்பர், 2017

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு! September 06, 2017

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!


தமிழகத்தில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய தேவை என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று கூறினார். எனவே, நீட் போராட்டங்களுக்கு மாநில அரசு அனுமதியளிக்கக் கூடாது என்றும், சட்டம் - ஒழுங்கு பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். 

ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

Related Posts: