சனி, 9 செப்டம்பர், 2017

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்! September 08, 2017

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்!


மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

கரூர் நகராட்சி பள்ளி மாணவர்கள் சுமார் 100 பேர் தங்களது வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். 

இதேபோல் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

மேலும் நீட் தேர்வு என்பது தமிழகம் மீது திணிக்கப்பட்ட அதிகார அராஜகம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார்.  நீட் தேர்வைக் எதிர்த்தும், அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் பேசிய வெள்ளையன் நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எதிரானது என கூறி அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

Related Posts: