சனி, 9 செப்டம்பர், 2017

நீட் தேர்வுக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்! September 09, 2017

நீட் தேர்வுக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்!


நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

சென்னை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வர்ணாசிரம அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வு முறையால், ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மருத்துவ கனவு பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகுதித் தேர்வு என்பது மாணவர்கள் பயின்ற பாடத் திட்டத்தில் தான் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை கொண்டு வந்து, தகுதித் தேர்வை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts: