நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக சூரிய பிரகாசம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர தொடர்ந்து போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்தார்.
பிற்காலத்தில் எந்த ஒரு விவகாரத்திலும் நீதிமன்றத்தை நாட முடியாத அளவிற்கும், மனு தாக்கல் கூட செய்ய முடியாதபடி தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டி இருக்கும் என்றும் அவர் அறிவுறுத்தினார். ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு, அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து நஷ்டஈடு வழங்க உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை செய்தார்.
மேலும் ஆசிரியர்களின் திறமையின்மையால் தான் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றிப்பெறவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒன்றும் உச்சகட்ட அதிகாரம் படைத்தவர்கள் இல்லை என்றும், எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணராமல் போராட்டம் நடத்தலாமா? என்றும் நீதிபதி கிருபாகரன் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராடும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செப்டம்பர் 18ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.