சனி, 16 செப்டம்பர், 2017

​“மைனஸ் ஒன்று + மைனஸ் ஒன்று = பூஜ்யம்” தவறான கணக்கைச் சொல்லி ஆசிரியரை மிரட்டிய பாஜ. அமைச்சர்! September 16, 2017

உத்தரகாண்ட் மாநில கல்வி அமைச்சர் எளிதான கணக்கிற்கு தவறான விடை அளித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

டேராடூனில் உள்ள பெண்கள் பள்ளியில் கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒரு வகுப்பிற்குள் நுழைந்து அங்கிருந்த ஆசிரியையிடம் மைனஸ் ஒன்றையும், மைனஸ் ஒன்றையும் கூட்டினால் என்ன விடை என அவர் கேட்டுள்ளார்

மைனஸ் 2 என அந்த ஆசிரியர் சரியாக பதில் கூறிய நிலையில், பூஜ்ஜியம் தான் சரியான விடை எனக் கூறிய அமைச்சர் ஒழுங்காக பாடம் நடத்துமாறு எச்சரிக்கையும் விடுத்துச் சென்றார். 

இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியானதால் அமைச்சர் குறித்து கேலியும், அவருக்கு கண்டனமும் எழுந்துவருகிறது.

Related Posts: