வியாழன், 24 ஆகஸ்ட், 2017

வறட்சியை சமாளிக்க கர்நாடகாவில் செயற்கை மழை! August 24, 2017

வறட்சியை சமாளிக்க கர்நாடகாவில் செயற்கை மழை!


கர்நாடகாவில் செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டள்ளது. கர்நாடகத்தில் நிலவி வரும்  வறட்சியை சமாளிக்க செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் கர்நாடக அரசு அறிவித்தது. 

இதற்காக அமெரிக்காவில் இருந்து அதிநவீன வசதிகள் கொண்ட விமானம் பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, செயற்கை மழை பெய்ய வைக்க, முதல்கட்டமாக பெங்களூரு, யாதகிரி, கதக் ஆகிய 3 இடங்களில் நேற்று முன்தினம் ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டது. அந்த கருவிகள் மூலம் எந்த பகுதிகளில் செயற்கை மழை பெய்ய வைக்கலாம் என்பது கண்காணிக்கப்பட்டு வந்தது. 

அதன்பிறகு, அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ள நவீன விமானம் மாகடி தாலுகா பகுதியில் முதலில் வானில் பறந்தபடி இருந்தது. அங்கு மேகங்கள் ஒன்று திரளாததால், பெங்களூரு புறநகர் ஆனேக்கல், ராமநகர் பகுதிகளில்  வானில் பறந்தபடி செயற்கை மழை பெய்வதற்காக ரசாயன பொடிகளை தூவியது. இதை தொடர்ந்து அங்கு தூரல் மழை பெய்தது.