வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் போராட்டம்! August 24, 2017


மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் போராட்டம்!


நீட் தேர்வு, மாநில சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு  பெற்றுத் தரத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கிடப்பில் போட்டதன் மூலம் தமிழக சட்டமன்றத்தை மத்திய அரசு அவமதித்துவிட்டதாக கூறினார்.

அமைச்சர்களின் டெல்லி பயணம் நீட்டுக்காக அல்ல அவர்களின் சுயலாபத்திற்காகவே என்பது தற்போது உறுதியாகியுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

Related Posts: