புதிதாக இருநூறு ரூபாய் நோட்டுகளை நாளை (25-08-2017) அறிமுகப்படுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் சில்லறை மாற்றுவதில் சிக்கல் இருந்து வந்தது. இதை நீக்கப் புதிதாக இருநூறு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
வெளிர் மஞ்சள் நிறத்திலான இந்தப் பணத்தாள்களில் முன்புறம் மகாத்மா காந்தியின் உருவப்படமும், பின்புறம் சாஞ்சி ஸ்தூபியின் படமும் அச்சிடப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் ஒரு சில அலுவலகங்களிலும், ஒருசில வங்கிகளிலும் நாளை இந்தப் புதிய இருநூறு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றன.
வழக்கமான பாதுகாப்பு அம்சங்களுடன் பார்வையற்றோர் அறிந்துகொள்வதற்கான அடையாளமும் இந்த நோட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் புதிய நோட்டுகளின் மாதிரி வடிவங்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.