வியாழன், 24 ஆகஸ்ட், 2017

தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை! August 24, 2017

 தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை!


தனி மனித ரகசியம் என்பது அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்ட அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பது தனிநபர் ரகசியம் காக்கும் உரிமைக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 
இதையடுத்து இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இதில் தனி மனித சுதந்திரம் மற்றும் தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமையே என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கை விசாரித்த 9 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். மேலும் ஆதார் அட்டைக்கு கைரேகை மற்றும் கண்விழி அடையாளங்கள் எடுப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதா என்பது குறித்து வேறு அமர்வு விசாரித்து முடிவு செய்து தீர்ப்பு வழங்கவுள்ளது.