நாட்டில் உள்ள 8 வழித்தடங்களில் அதிவேக ரயில்களை இயக்க இந்திய ரயில்வேதுறை திட்டமிட்டிருந்தது. இந்த அதிவேக ரயில் திட்டங்களில் பங்கெடுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் ஆர்வம் காட்டின.
திட்டமிடப்பட்ட 9 வழித்தடங்களில் 192 கிமீ நீளம் கொண்ட சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடமும் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் தற்போது 80 கிமீ வேகத்தில் ரயில்கள் இயங்கும் நிலையில் இதன் வேகத்தை 160 கிமீ ஆக உயர்த்துவதே மத்திய அரசின் நோக்கம் ஆகும்.
இத்திட்டத்தில் சீன ரயில்வே நிறுவனமான China Railway Eryuan Engineering Group Co Ltd (CREEC) ஆர்வம் காட்டியது.
இத்திட்டம் குறித்த ஆய்வை கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கிய சீன நிறுவனம் இது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை 2016ஆம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
எனினும் இதன் பின்னர் சீன நிறுவனத்திடமிருந்து எந்த வித தொடர்பும் இல்லாத நிலையில், இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மூலம் தொடர்பு கொண்டும், கடிதம், ஈ-மெயில் உள்ளிட்ட வழிகளில் எண்ணற்ற முறை தொடர்பு கொண்ட போதிலும் சீன நிறுவனத்திடமிருந்து முறையான பதில் இல்லை.
காரணம் என்ன?
கடந்த ஜூன் 16 முதல் ஆகஸ்ட் 28 வரை நீடித்த டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவிற்கும் - சீனாவிற்கும் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த ரயில் திட்டத்தை சீன நிறுவனம் தவிர்ப்பதாக கருதப்படுகிறது.
ஏனெனில், இதற்கு முன்னதாக சென்னை- பெங்களூரு அதிவேக ரயில் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டியதோடு, மேலும் சில திட்டங்களிலும் இந்திய ரயில்வேயுடன் இணைந்து பணியாற்ற சீன நிறுவனம் விரும்பியதாகவும் மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே போல மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் அதிவேக ரயில் இயக்க சீனா முயன்ற நிலையில், அந்த வாய்ப்பு ஜப்பானுக்கு கிடைத்தது.
இந்நிலையில் மத்திய அரசு அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்த எண்ணிய 9 வழித்தடங்களில் டெல்லி - ஆக்ரா இடையே நாட்டின் அதிவேக ரயிலான Gatimaan Express கடந்த 2016ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.